ரூத்: 1: 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம்.அங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை. ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் ஸ்பிரிங் சீசனில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும் வண்ணமயமான இலைகளுடன் கண்களைக்… Continue reading இதழ்:1982 நம் உள்ளத்தில் விதைக்கப்படும் கசப்பு என்னும் விதை!
இதழ்:1981 நம்மை அழித்துக் கொண்டிருக்கும் கசப்பு என்னும் திராவகம்!
ரூத்: 1 : 19, 20 ” அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்து போனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.” இந்த புத்தகத்தை ராஜாவின் மலர்களுக்காக நான் எழுத ஆரம்பிக்குமுன், என்னிடம் யாராவது ரூத் என்ற புத்தகத்தைப்பற்றி சுருக்கமாக கூறும்படிக் கேட்டிருந்தால், ரூத்… Continue reading இதழ்:1981 நம்மை அழித்துக் கொண்டிருக்கும் கசப்பு என்னும் திராவகம்!
இதழ்:1980 அன்பினால் என்னைக் கண்டெடுத்த தேவன்!
ரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக் கற்பனைப் பண்ணிப் பார்த்தேன். அயல்நாட்டில், பிழைப்பைத்தேடி சென்ற இடத்தில் கணவனையும், இரு குமாரரையும் இழந்த ஒரு விதவை அவள்! இப்பொழுது எல்லாவற்றையும் இழந்த… Continue reading இதழ்:1980 அன்பினால் என்னைக் கண்டெடுத்த தேவன்!
இதழ்:1979 கர்த்தருடைய அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்திய சாட்சி!
ரூத்: 1: 16 “… உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” ஒருநாள் இண்டெர்னெட்டில் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி மருத்துவங்களைப் பற்றிய கேள்வி பதில்களுக்கு பதில் கொடுத்து என்னுடைய மருத்துவ அறிவை வளர்க்க சற்று முயற்சி செய்வேன். ஆனால் அன்று நான் பங்கு பெற்றது கொஞ்சம் வித்தியாசமானது. கேட்கப்படுகிற கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லும் விளையாட்டு. சில கேள்விகளுக்கு அநேகருடைய பதில் ஒரேமாதிரி இருந்தது. உதாரணமாக, 1.… Continue reading இதழ்:1979 கர்த்தருடைய அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்திய சாட்சி!
இதழ்:1978 நமக்குள்ளே எத்தனை பாகுபாடு!!!!
ரூத்: 1: 16 “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவன்… நம் நாட்டை சேர்ந்தவ இல்லை! அயல் நாடு! அவன் நம் சபையை சேர்ந்தவன் அல்ல! அப்பப்பா! கிறிஸ்தவர்களுக்குள்ளே எத்தனை பாகுபாடு!!! ரூத் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை… Continue reading இதழ்:1978 நமக்குள்ளே எத்தனை பாகுபாடு!!!!
இதழ்:1977 மற்றவரின் குறைகளை பெரிது படுத்தாதே!
ரூத்: 1:22 இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; என் கணவருடைய குடும்பத்தில் எந்த நல்ல காரியங்களிலும் எங்களுக்கு அழைப்பு இருந்ததே கிடையாது. காரணம் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்றாலே தாழ்ந்த ஜாதி என்றும், மேற்கத்திய மதத்தினர் என்றும் எண்ணம் உண்டு! எனக்குத் திருமணமானபோது அவர்கள் என்னிடம் பழகியவிதம் ஏதோ ஒரு அயல்நாட்டுப் பெண்ணை நடத்துவதுபோலத் தான் எனக்கு இருக்கும். இரண்டு அயல்நாட்டு… Continue reading இதழ்:1977 மற்றவரின் குறைகளை பெரிது படுத்தாதே!
இதழ்:1976 உள்ளத்தில் கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்!
ரூத்: 1: 14 ” ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள். என்னுடைய தோட்டத்தில் ஒரு தாட்பூட் பழக் கொடி (Passion fruit) வளர்ந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அநேக கனிகள் கூட கொடுத்தது. அது அருகில் உள்ள முருங்கை மரத்தை சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வருகிறது. நல்ல கனி கொடுக்கும் கொடியாக இருந்தபடியால் நாங்களும் விட்டு விட்டோம். இப்பொழுது அது முருங்கையை ஒரேயடியாக சுற்றி வளைத்து விட்டது. இன்றைக்கு பார்த்தால்… Continue reading இதழ்:1976 உள்ளத்தில் கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்!
இதழ்:1975 அந்த ஓர்பாளைப் போல நீயும் இன்று தேவைப்படுகிறாய்!
ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நகோமித் தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது!ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று! ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்! தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அர்த்தம்… Continue reading இதழ்:1975 அந்த ஓர்பாளைப் போல நீயும் இன்று தேவைப்படுகிறாய்!
இதழ்:1974 உன்னை உபயோகப்படுத்தவே தேவன் சித்தம் கொண்டுள்ளார்!
ரூத்: 1: 6 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, ரூத்: 1: 7 தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ ரூத்: 1: 8 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல,… Continue reading இதழ்:1974 உன்னை உபயோகப்படுத்தவே தேவன் சித்தம் கொண்டுள்ளார்!
இதழ்: 1973 தேவனுடைய திட்டமின்றி எதுவும் நம்மை அணுகாது!
ரூத்: 1 : 13 “… என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.” இந்த புதிய மாதத்தைக் காணக் கர்த்தர் செய்த கிருபைக்காக அவரை நன்றியோடு ஸ்தோத்தரிப்போம். ஏத்தனையோபேருக்கு கிடைக்காத மாதயவு இது! இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து வழி நடத்தும்படி அவருடைய கரத்துக்குள் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்! நாம் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் தன் மருமக்களை நோக்கித்… Continue reading இதழ்: 1973 தேவனுடைய திட்டமின்றி எதுவும் நம்மை அணுகாது!
