எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். மோசேயின் மனைவியாகிய சிப்போராளின் மூலம் நம் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல குணநலன்களைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். நேற்று நாம் மோசே தன் மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டு… Continue reading இதழ்: 1059 நீ அமைதியாயிருந்தால் கர்த்தர் கேட்பார்!
Tag: குடும்பம்
இதழ்:1057 நல்ல குடும்பமே ஒருவனின் வெற்றிக்குப் பின்னணி!
யாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….” நாம் கடந்த நாட்களில் மோசேயுடைய வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்த பெண்களைப் பற்றி அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், அவனை பரிவுடன் வளர்த்து ராஜ குமாரனாக்கிய பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மிகப்பெரிய தலைவனாவதற்கு ஒருமுக்கிய காரணம் வகுத்தனர். அவன் மனைவியாகிய சிப்போராள்… Continue reading இதழ்:1057 நல்ல குடும்பமே ஒருவனின் வெற்றிக்குப் பின்னணி!
இதழ்: 1056 கீழ்ப்படியாமையால் வந்த ஆபத்து!
யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்…. வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். சிப்போராள் மோசேக்கு பாலைவனத்தில் கிடைத்த நீரோடை என்று பார்த்தோம். பல கனவுகளோடு… Continue reading இதழ்: 1056 கீழ்ப்படியாமையால் வந்த ஆபத்து!
இதழ்: 1054 நம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருமா?
யோவான்:13: 34 “ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்” கடந்த சில வாரங்களாக நாம் யாத்திராகம புத்தகத்தில்பெஇடம் பெற்றுள்ள அநேகப் ண்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். எபிரேயக் குழந்தைகளை சிசுகொலையினின்று காத்த சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளை சந்தித்தோம்! பார்வோன் குமாரத்தியைப் பற்றியும், மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றியும் அறிந்து கொண்டோம். சில நாட்களாக மோசேயின் சகோதரி மிரியாமை சந்தித்து, தேவனால் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட, இஸ்ரவேல்… Continue reading இதழ்: 1054 நம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருமா?
இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா?
ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் என் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன்… Continue reading இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா?
இதழ் 1015 பிள்ளைகளின் குணத்தின் அழகு இல்லத்தில் பிறக்கும்!
ஆதி: 25:23 அதற்கு கர்த்தர்; இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது ; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்: அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள்; மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்றார். ஒரு குடும்பத்தில் அநேக பிள்ளைகளோடு வளர்ந்த சிலர், முதல் பிள்ளைக்குத்தான் அம்மாவிடம் பாசம் கிடைக்கும் கடைசி பிள்ளைக்கும் அதில் பங்குண்டு, ஆனால் நடுவில் உள்ள பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்காது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சொத்து விஷயங்களில் கூட சில பெற்றோர்… Continue reading இதழ் 1015 பிள்ளைகளின் குணத்தின் அழகு இல்லத்தில் பிறக்கும்!
இதழ்:835 நீ உன் குடும்பத்தைத் தெரிந்து கொள்ளவில்லை!
யோவான்:13: 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன். அன்பின் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள்! கடந்த 2009 லிருந்து, 2019 வரை 42 நாடுகளிலிருந்து உங்களில் அநேகர் ஒவ்வொரு நாளும் இந்த தோட்டத்துக்கு வருகை தருவதைப் பார்த்து கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை மலர்களாக செலுத்தினேன். இது உங்கள் ஒவ்வொருவரிலும் உள்ள வேதத்தைக் குறித்த தாகத்தைத் தான் எனக்கு வெளிப்படுத்தியது. நான் இந்த தின… Continue reading இதழ்:835 நீ உன் குடும்பத்தைத் தெரிந்து கொள்ளவில்லை!
