1 சாமுவேல் 18:15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். தாவீதின் வாழ்க்கையில் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்ததையும் அவன் புத்திமானாய் நடந்து கொள்வதையும் சவுல் கண்டு அவனுக்கு பயந்தான் என்று இன்றைய வசனம் சொல்கிறது. தாவீது செய்த எல்லா காரியங்களிலும் பரலோக தேவன் அளித்த ஞானம் புலப்பட்டது. அவனுடைய வாழ்க்கையின் மூலம் கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது. ஒருவேளை தாவீதின் முகத்தைப் பார்க்ககூட பயந்தானோ என்னவோ அதனால் சவுல் அவனைத் தொட பயந்து என்… Continue reading இதழ்: 616 சாட்சி சொல்லவே வேண்டாம்!
Tag: சவுல்
இதழ்: 615 ஒப்பிட்டு பேசாதே! அது ஆபத்தானது!
1 சாமுவேல்: 18: 7 -9 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து .... இஸ்ரவேலில் கொண்டாட்டம்! பெண்கள் ஆடல் பாடலுடன் தாவீதின் வெற்றியைக் கொண்டாடினர். பெண்கள் தெருக்களில் கூடி சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாடுவதை சற்று மனக்கண்கள் முன்பு கொண்டுவாருங்கள்! எத்தனை களிப்பு! எத்தனை சிரிப்பு! எல்லா திசையிலும் கலகலவென்று… Continue reading இதழ்: 615 ஒப்பிட்டு பேசாதே! அது ஆபத்தானது!
இதழ்: 611 அன்று தப்புவித்தவர் இன்றும் தப்புவிப்பார்!
1 சாமுவேல் 17:37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். ஒருமுறை எங்களுடைய ரிசார்ட் இருக்கும் வால்பாறை அருகே கரடியால் தாக்கப்பட்ட ஒருவரின் படத்தை யாரோ அனுப்பியிருந்தார்கள். உடம்பு சிலிர்த்தது! வலது கையை கடித்து குதறியிருந்தது. என்னக் கொடூரமான மிருகம் என்று நினைத்தேன்! இரண்டுமுறை எங்கள் கார் முன்னால் கரடி குறுக்கே ஓடியததைப் பார்த்திருக்கிறேன். இன்றைய வசனத்தில்,ஒருமுறை கரடி மட்டும் அல்ல சிங்கமும் தாவீதையும்… Continue reading இதழ்: 611 அன்று தப்புவித்தவர் இன்றும் தப்புவிப்பார்!
இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!
1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான். அழகான வர்ணம் தீட்டும் இருவரிடம் ஒரு அமைதியான சூழலை வரையும்படி கூறினர். ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார். மற்றொருவரோ மிக விரைவாக ஓடிவரும் ஒரு நீர்வீழ்ச்சியையும், அதன் அருகே காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட… Continue reading இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!
இதழ்: 607 அகத்தின் அழகு!
1 சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றான். சரித்திரத்தில் நடக்கும் சம்பவங்களில் பல, மீண்டும் மீண்டும் நடப்பதை நம்மில் பலர் படித்திருக்கிறோம், கண்டுமிருக்கலாம். வேறொரு நாட்டின் சரித்திரம் இன்னொரு நாட்டில் நடக்க வாய்ப்புண்டு. அதைபோல வேறொரு காலகட்டத்தில், வேறொரு இன மக்களிடம் நடந்த சம்பவங்கள் நாம் வேதத்தில்… Continue reading இதழ்: 607 அகத்தின் அழகு!
இதழ் : 606 சவுலின் பதவி விலக்கம் எதனால்?
1 சாமுவேல் 16:1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். 1 சாமுவேல் 15 ம் அதிகாரத்தில் நாம் கடைசியாக சென்ற வாரம் பார்த்தது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. சவுல் தன்னுடைய முரட்டாட்டத்தால் தன்னுடைய தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டான் என்று பார்த்தோம். 35… Continue reading இதழ் : 606 சவுலின் பதவி விலக்கம் எதனால்?
இதழ்: 604 உன் பார்வைக்கு நீ சிறியவனா?
1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர். நாம் நாமாக இல்லாமல் யாரோவாக மாறத்தூண்டுகிறது இன்றைய சினிமா உலகம். அநேக வாலிபர் இந்த சிலந்தி வலையில் சிக்கித் தங்களை வேறொருவராக மாற்ற முயல்கின்றதைப் பார்க்கிறோம். நடை, உடை, தலைமுடி எல்லாமே தங்களுடைய சினிமா ஸ்டார் போல் மாற்றிக்கொள்கின்றனர். இந்த ஸ்டார் என்ற வார்த்தை இன்றைய ஊழியக்காரருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சிலர் பெரிய மேடையை அலங்கரிக்கின்றனர். அவர்களுடய… Continue reading இதழ்: 604 உன் பார்வைக்கு நீ சிறியவனா?
இதழ்: 602 என்னிடம் ஏன் இந்த மனஸ்தாபமோ!
1 சாமுவேல் 15: 10,11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்! அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே நீங்களும் நினைக்கிறீர்கள்! இந்த மனவேதனை… Continue reading இதழ்: 602 என்னிடம் ஏன் இந்த மனஸ்தாபமோ!
மலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா?
1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். ஒருமுறை கர்த்தருடைய ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கா விண்ணப்பித்திருக்கிறார் என்று நினைத்தேன்! ஒரு வேலைக்கு… Continue reading மலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா?
மலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்!
1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். என்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து… Continue reading மலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்!
