நியாதிபதிகள்: 16:5 அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பல்ம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; ஏதேன் தோட்டத்தில் ஒருநாள் சர்ப்பமானவன் ஏவாளின் வருகைக்காகக் காத்துக்கொண்டேயிருந்தான். தனிமையில், தற்காப்பு இல்லாமல் வந்த ஏவாளின் பெலவீனத்தை தாக்கினான்! சர்ப்பம் தந்திரமாக வைத்த வலையில் விழுந்தாள் ஏவாள். 1 பேதுரு 5: 8 ல் பேதுரு நம்மிடம் சாத்தான் எவனை விழுங்கலாமோவென்று… Continue reading இதழ்: 943 நம்முடைய வாழ்வை வீணாக்கும் தெலீலாள்!
Tag: சிம்சோன்
இதழ்: 942 பிள்ளைகளை வளர்ப்பதில் எங்கே தவறி விட்டோம்?
நியாதிபதிகள்: 14:6 “ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.” தன்னுடைய பிள்ளையை நல்லமுறையில் கர்த்தருடைய பிள்ளைகளாக வளர்க்க எல்லாத் தியாகங்களையும் பண்னுகிற ஒவ்வொரு தகப்பனுக்கும் தாய்க்கும் இன்றைய தியானத்தை அர்ப்பணிக்கிறேன். நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். சிம்சோனின் தகப்பனாகிய மனோவாவும் அவனுடைய உத்தம மனைவியும் , நசரேயனாக வாழக் கர்த்தரால் அழைக்கப்பட்ட தங்கள் மகன் படிப்படியாக கர்த்தரைவிட்டு, அவருடைய சித்தத்தைவிட்டு வழி தவறி செல்வதை கவனித்துக்கொண்டுதான் இருந்தனர். இன்று அநேகப்… Continue reading இதழ்: 942 பிள்ளைகளை வளர்ப்பதில் எங்கே தவறி விட்டோம்?
இதழ்: 941 சிம்சோனை வீழ்த்திய காம வெறி!
நியாதிபதிகள்: 16:1 ” பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய் அங்கே ஒரு வேசியைக் கண்டு அவளிடத்தில் போனான்.” தன் மனைவி பெலிஸ்தரின் கோபத்தால் தீக்கிரையான பின்னர் சோகத்தில் ஆழ்ந்து போனான் சிம்சோன் என்று நமக்கு எண்ணத் தோன்றும். அவள் தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து அடைந்த பெண் அல்லவா? அவன் கண்களுக்குப் பிரியமாயிருந்தவள் அல்லவா? ஆனால் அப்படியல்லாமல், பெலிஸ்தரை சின்னபின்னமாய் சங்காரம் பண்ணிவிட்டு ஏத்தாம் ஊர் கன்மலை சந்திலே குடியிருந்தான். சற்று நாட்களில் இஸ்ரவேலரும்… Continue reading இதழ்: 941 சிம்சோனை வீழ்த்திய காம வெறி!
இதழ் 940 மனதார மன்னியுங்கள்!
நியாதிபதிகள்: 15: 4 – 6 ” ( சிம்சோன்) புறப்பட்டுப்போய், முன்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்கள எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும், திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புக்களையும் சுட்டெரித்துப் போட்டான். இப்படிச்செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன் தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படி செய்தான் என்றார்கள். சில வருடங்களுக்கு… Continue reading இதழ் 940 மனதார மன்னியுங்கள்!
இதழ்: 939 திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமா?
நியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…” இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், பிளாக்பெரியிங் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான். திம்னாத்தில்… Continue reading இதழ்: 939 திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமா?
இதழ்: 938 என் பாத்திரம் நிரம்பி வழியட்டும்!
நியாதிபதிகள்: 14:3 அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி :அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். நாம் சிம்சோனைப் பற்றிப் படிப்பதைத் தொடருவோம். தேவனுடைய பணியாக பெலிஸ்தரின் ஊரான திம்னாத்துக்கு அனுப்பப்பட்ட சிம்சோன், அங்கு ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு அவள் தான் எனக்கு… Continue reading இதழ்: 938 என் பாத்திரம் நிரம்பி வழியட்டும்!
இதழ்:937 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்னும் குணம்!
நியாதிபதிகள்: 14:2 (சிம்சோன்) திரும்ப வந்து தன் தாயையும் தகப்பனையும் நோக்கி; திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான். என்னுடைய வாழ்க்கையில் சிறு வயது முதல் இது வரைக்கும் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து , அதன்மேல் ஆசைப்பட்டு அதை எப்படியாவது அடையவேண்டும் என்று அடம் பிடித்து அழுத ஞாபகம் எனக்கு இல்லவே இல்லை. சிறு வயதிலிருந்தே இதை’செய்யாதிருப்பாயாக’ , அதை விரும்பாதிருப்பாயாக என்ற கட்டளைகளை எனக்கு நானே… Continue reading இதழ்:937 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்னும் குணம்!
இதழ்: 936 மயங்க வைக்கும் சிற்றின்பங்கள்!
நியாதிபதிகள்: 14: 1 ” சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு பின்பாக துங்கபத்திரா ஆறு ஓடியது. மும்பையில் மழை அதிகமாக இருந்தால் துங்கபத்திராவில் தண்ணீர் மிகவும் அதிகமாக ஓடும். ஒருவருடம் ஆற்று நீர் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்து விட்டது. ஆற்றில் ஓடியவரை சுத்தமாக ஓடிக்கொண்டிருந்த நீர், ஊருக்குள் புகுந்த போது வழியில் உள்ள எல்லா… Continue reading இதழ்: 936 மயங்க வைக்கும் சிற்றின்பங்கள்!
இதழ்:935 எங்கே வாழ்கிறோமோ அங்கேயே வரும் அழைப்பு!
நியாதிபதிகள்:13 : 25 “அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.” ஒருநிமிடம் நாம் இந்த தாணின் பாளயத்தில் வாழ்வதாக நினைத்துப் பார்ப்போம். நம்மை சுற்றிலும் வாழும் பெலிஸ்தர் எப்பொழுதும் நம் சரீர வாழ்க்கையை மட்டும் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் தரைமட்டமாக்கக் காத்துக்கொண்டிருந்தால் நம்மால் சந்தோஷமாக ஒருநாளாவது வாழ முடியுமா? அப்படி நாம் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள் நம் பகுதியில் குழந்தையே இல்லாமல் வாழ்ந்த… Continue reading இதழ்:935 எங்கே வாழ்கிறோமோ அங்கேயே வரும் அழைப்பு!
இதழ்:934 இந்தக் கொடிய காலத்தில் உன்னோடு துணையிருப்பார்!
நியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். நேற்று இரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. விடியற்காலை எங்கள் குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி மூன்று முறை அடித்தவுடன் எழும்பிவிட்டேன். ஜன்னல் வழியே வெளியே சற்று நேரம் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இருண்ட மேகத்தைக் கிழித்துக்கொண்டு சந்திரனின் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருன்தன. இருண்ட வானமும், ஊடுருவி வீசிய ஒளியும் என் தேவனாகிய… Continue reading இதழ்:934 இந்தக் கொடிய காலத்தில் உன்னோடு துணையிருப்பார்!
