2 சாமுவேல்: 6: 10,11 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ..... கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். ஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா? ஆனால் உங்களில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்! தாவீது கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா.… Continue reading இதழ் :685 கர்த்தருடைய பிரசன்னம் அளிக்கும் ஆசீர்வாதம்!
Tag: தாவீது
இதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா?
2 சாமுவேல் 6: 6,7 ....மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான், அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். பரிசுத்தமான தேவனைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று! யாத்திராகமம் 25 - 30 வரை வாசிப்பீர்களானால் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைக்கவேண்டிய தேவனுடைய கூடாரத்தை… Continue reading இதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா?
இதழ்: 682 பேராசைக்கு பதிலாய் திருப்தி!
2 சாமுவேல் 5: 13 அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும், ஸ்திரீகளையும் கொண்டான். 1 சாமுவேல் 30: 23-24 அதற்கு தாவீது: என் சகோதரரே கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படி செய்ய வேண்டாம்.....யுத்தத்திற்கு போனவர்களின் பங்கு எவ்வளவோ அவ்வளவு ரஸ்துகளண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காக பங்கிடவேண்டும் என்றான். இன்றைய வேத வசனங்கள் பேராசையையும், மனநிறைவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவை தாவீதின் உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் காணப்படும்… Continue reading இதழ்: 682 பேராசைக்கு பதிலாய் திருப்தி!
இதழ்: 680 பழிவாங்குதலுக்கு பதிலாய் மன்னிப்பு!!
1 சாமுவேல்: 26:8,9 அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இப்பொழுதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா என்றான். தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கைகளைப்போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான். தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தான். கோலியாத்தைக் கொன்றபின்னர் சவுலின் சேவகனாகவும், சவுல் அசுத்த… Continue reading இதழ்: 680 பழிவாங்குதலுக்கு பதிலாய் மன்னிப்பு!!
இதழ்: 679 கோபத்துக்கு பதிலாய் பொறுமை!
1 சாமுவேல் 25:13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான். 2 சாமுவேல் 2:1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவைப்பற்றி நாம் தொடர்ந்து படிக்கும் போது தாவீதின் சில அடிப்படை குண நலன்களை நாம் பார்க்காமல் கடந்து போகக்கூடாது. இன்றைய வசனங்கள் நமக்கு தாவீதின் குணத்தின் இரு பக்கங்களைக் காட்டுகிறது. ஒருபக்கம்… Continue reading இதழ்: 679 கோபத்துக்கு பதிலாய் பொறுமை!
இதழ்: 678 உன் இருதயம் எப்படியிருக்கிறது?
2 சாமுவேல் 5:10 தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான். சேனைகளின் தேவனாகிய அவனோடேகூட இருந்தார். தேவனாகிய கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடு ஏற்படுத்தும் அழகிய உறவைப்பற்றி பார்த்தபின்னர், நாம் இன்று தாவீதின் வாழ்க்கையைத் தொடருகிறோம். தாவீதைப்பற்றி எல்லோருடைய மனதிலும் எழும் ஒரே கேள்வி, கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைக்கப்பட்ட தாவீது எப்படி பெண்களோடு கொண்ட உறவில் தவறு செய்தான் என்று! தாவீதைப் பற்றி கடந்த சில நாட்களில் அதிகமாக படித்தபோது, தன் இள வயதில் தேவனோடு… Continue reading இதழ்: 678 உன் இருதயம் எப்படியிருக்கிறது?
இதழ்: 671 உள்ளம் போன போக்கில்!
2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்ப்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன். என்னுடைய சொந்த அனுபவங்களுக்காக நான் இன்று கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் விரும்பினது எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை.… Continue reading இதழ்: 671 உள்ளம் போன போக்கில்!
இதழ்: 670 உனக்கு சொந்தமில்லாத ஒன்றின்மேல் ஆசையா?
2 சாமுவேல் 3: 15,16 அப்பொழுது இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான். அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி நீ திரும்பிப்போ என்றான். அவன் திரும்பிப்போய்விட்டான். தாவீதுக்கும் மீகாளுக்கும் நடுவில் இருந்த அன்பின் கதை 1 சாமுவேல் 18:28 ல் ஆரம்பித்தது. மீகாள் தாவீதை நேசித்தாள், ஆனால் ஒருவேளை தாவீது அவளை உண்மையாக நேசித்தானா அல்லது ராஜாவின் மகள் என்பதற்காக மணந்தானா… Continue reading இதழ்: 670 உனக்கு சொந்தமில்லாத ஒன்றின்மேல் ஆசையா?
இதழ்: 669 எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை!
2 சாமுவேல் 3:14 .... நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம் பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான். தாவீது சவுலின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்ய சவுல் கேட்டதையெல்லாம் செய்திருந்தான். ஆனால் சவுல் தாவீதைப் பழிவாங்க நினைத்து அவன் மனைவியாகிய மீகாளை வேறொருவனுக்கு விவாகம் செய்திருந்தான். இப்பொழுது சவுல் மரித்த பின் தாவீது தனக்கு நடந்த அநியாயத்தை சரி செய்யப் பார்க்கிறான். இந்த வேளையில் அவனுக்கு ஆறு… Continue reading இதழ்: 669 எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை!
இதழ்: 668 மிரட்டிப் பறிக்கும் குணம்!
2 சாமுவேல் 3: 12,13 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி , தேசம் யாருடையது? என்னோடே உடன்படிக்கை பண்ணும். இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான். அதற்கு தாவீது: நல்லது. உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் ஒரேகாரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும். நான் பலமுறை வேதத்தைப் படித்திருந்தாலும் ராஜாவின் மலர்களுக்கு… Continue reading இதழ்: 668 மிரட்டிப் பறிக்கும் குணம்!
