யாத்தி: 14: 1,4 “கர்த்தர் மோசேயை நோக்கி: ஆகையால் பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு நான் அவன் இருதயத்தை கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்….” கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடக்க விடாமல், அதற்கு எதிர் திசையில் வழிநடத்தி சமுத்திரத்துக்கும், வனாந்திரத்துக்கும் இடையே பாளையமிறங்கக் கட்டளையிட்டார் என்று பார்த்தோம். இன்று நாம் அந்த சம்பவத்தைத் தொடருவோம். பார்வோனின் அரண்மனையில் ஒரே பரபரப்பு! ஒரே ஆரவாரம்! ஏன்? கோஷேன் நாட்டிலிருந்து… Continue reading இதழ்: 1061 திகையாதே! வெற்றி உனதே!
Tag: வெற்றி
இதழ்: 901 மன உறுதியே வெற்றிக்குள் நடத்தும்!
நியா: 4:10 அப்பொழுது பாராக்; செபுலோன் மனுஷரையும், நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபோராளும் அவனோடேகூடப் போனாள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த தாலந்துகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நான் வாயைப் பிளந்து பார்ப்பதுண்டு! எனக்கு எந்தக் கலையிலும் தாலந்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே கிடையாது! ஆனால் சாலை ஒரங்களில் படம் வரைந்து பணம் வசூலிக்கும் கலைஞன் முதல், கல்லில் சிலை வடிக்கும் சிற்பக் கலைஞன் வரை, பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்கள்… Continue reading இதழ்: 901 மன உறுதியே வெற்றிக்குள் நடத்தும்!
இதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்!
யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள்… Continue reading இதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்!
இதழ்: 698 விசேஷித்த பெலன்!
2 சாமுவேல்8: 1-3, 5,6 தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து....... அவன் மோவாபியரையும் முறிய அடித்து....... ரேகாபின் குமாரனாகிய ஆதாசேர் என்னும் சோபாவின் ராஜா....தாவீது அவனையும் முறிய அடித்து.......தாவீது சீரியரின் இருபதீராயிரம் பேரை வெட்டிப்போட்டு.....தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். சில நாட்களாக பெலவீனத்தை அகற்றி பெலனூட்டும் காய்கறிகள், உணவு வகைகள் பற்றி நிறைய படிக்கிறேன். இன்றைய வேதாகமப் பகுதியைப் படிக்கும்போது தாவீது அப்படி என்னதான் சாப்பிட்டிருப்பான், அவன் இவ்வளவு பலசாலியாக இருந்ததற்கு என்ன காரணம்… Continue reading இதழ்: 698 விசேஷித்த பெலன்!
மலர் 5 இதழ் 309 எபெனேசர்! இம்மட்டும் உதவி செய்தார்!
1 சாமுவேல் 7:12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். இருபது வருடங்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் வாழ்ந்ததால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய கோபாக்கினையை அனுபவித்துதான் ஆக வேண்டும், அவர்களுக்கு கர்த்தர் எப்படி தயை செய்வார்? கர்த்தர் ஒன்றும் அவர்களை சும்மா விடப் போவதில்லை என்றுதானே நாம் எண்ணுகிறோம்? அவர்கள் சாமுவேலிடம் ஜெபிக்கும் படி வேண்டியபோது கர்த்தருடைய… Continue reading மலர் 5 இதழ் 309 எபெனேசர்! இம்மட்டும் உதவி செய்தார்!
