Bible Study

மலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?

    ஆதி: 18: 9 - 15   தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! ஆபிரகாம் விருந்தினரை  உபசரித்ததை பற்றி நேற்று பார்த்தோம். வாசலில் நின்ற மூன்று புருஷரையும் வருந்தியழைத்து, விருந்தளித்த பின்னர்,  சாராள் மற்ற வேலைகளைப் பார்க்க கூடாரத்துக்குள் திரும்பினாள். ஆபிரகாம் விருந்தாளிகளோடு மரத்துக்கடியில் நின்று கொண்டிருந்தான். சாராள் உள்ளே  வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் காது வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்? அவர்கள் யார்? என்பதை அறிய கவனமாயிருந்தது. அவர்கள் ஆபிரகாமிடம் உன் மனைவி சாராள்… Continue reading மலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?

Bible Study

மலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா?

ஆதி: 18: 1- 10   தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!   காலங்கள் உருண்டு ஒடின! ஆகார் வனாந்திரத்திலிருந்து திரும்பி வந்து இஸ்மவேலைப் பெற்ற பின் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன! இப்பொழுது ஆபிராமுக்கு வயது 99.       (ஆதி: 17:5) கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, “இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால் , உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்” என்றும் ,  ( ஆதி: 17:15)  “சாராய்… Continue reading மலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா?

Bible Study

மலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்! – II

ஆதி: 16 : 9    தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவன் ஆகாரை, அவள் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வனாந்திரத்தில் கண்டார்.  ஆதி: 16:13                 “ என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” என்றாள்  ஆகார் என்று நேற்று பார்த்தோம். அவள் கடினமான வனாந்திரத்தில் அலைந்து திரிந்த போது கர்த்தர் அவளை நோக்கி, “ நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப் போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு” என்று சொல்வதைக் காண்கிறோம். ஒரு பெண் கடினமாக நடத்தப்பட்டாள்… Continue reading மலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்! – II

Bible Study

மலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்!

ஆதி: 16     தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! கர்த்தருக்கு கீழ்ப்படிந்து , அவருக்கு காத்திராமல், அவசரமாக எடுத்த முடிவால் தங்களுடைய உள்ளத்திலும், இல்லத்திலும் நிம்மதியை இழந்து தவித்தனர் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம்.  இவர்கள் நிம்மதியிழக்கக் காரணமான ஆகாரைப் பற்றி சிறிது சிந்திப்போம் இன்று. இந்த ஆகார் யார்?, இவள் பெயருக்கு அர்த்தம் என்ன? வேதம் அவளைப் பற்றி எதுவும் கூறவில்லை. அவள் ஒரு அடிமைப் பெண் என்றும், இஸ்மவேலின் தாய் என்றும் அறிவோம். இந்த… Continue reading மலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்!

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர்:1 இதழ்:16 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – III

ஆதி: 16     தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் முயற்சியில் , சாராயுடைய திட்டத்தின் படி, ஆகாரோடு இணைந்தான் ஆபிராம் என்று நாம் பார்த்தோம். இதனால் விளைந்தது என்ன? சாராய் நினைத்தது ஓன்று , ஆனால் நடந்தது வேறு!  ஆதி:16: 4 கூறுகிறது, “ ஆகார் தான் கர்ப்பவதியானதைக் கண்ட போது தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்” என்று.  இவ்வளவு நாட்களாக சாராய்… Continue reading மலர்:1 இதழ்:16 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – III

Bible Study

மலர்:1 இதழ்:15 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – II

ஆதி: 16     தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! நேற்று நாம் சாராய் தீட்டிய திட்டத்தைப் பற்றியும், அதை அவள் தன் கணவனிடம்  கூறும்போது, தேவன் மேல் போட்ட பழியைப் பற்றியும் பார்த்தோம். ஆபிராம் மட்டும் என்ன! தன்னை பேர் சொல்லி அழைத்து, வாக்குத்தத்தம் கொடுத்து, வழி நடத்தி வருகிற தேவனை கேட்க வேண்டும் என்று ஓருகணம் நினைத்தாரா? அல்லது கேட்டாரா? இல்லவே இல்லை. சாராய் வந்து இளம் பெண் ஆகாரோடு நீர் சேர்ந்து எனக்கு ஒரு குழந்தையைத் தாரும்… Continue reading மலர்:1 இதழ்:15 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – II

Bible Study

மலர் :1 இதழ் 14 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – I

    ஆதி: 13:16             தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்! மிகுந்த ஆஸ்தியோடு  எகிப்தைவிட்டு புறப்பட்டு கானானை நோக்கி சென்றார்கள் ஆபிராம், சாராய் தம்பதியினர்.  போகும் வழியில், எகிப்தின் சுகபோகத்தை அனுபவித்திருந்த, ஆபிராமின் சகோதரன் மகனாகிய லோத்து, எகிப்தை போல செழிப்பாயிருந்த சோதோமுக்கு அருகான சமபூமியை எடுத்துக் கொண்டான். பின்னர் லோத்து சோதோமிலேயே குடியேறிவிட்டான் என்று பார்க்கிறோம். எகிப்தின் சுகபோகமான வாழ்க்கையே  லோத்து சோதோமை தெரிந்து கொண்டதின் காரணம். ஆபிராமும், சாராயும், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, எபிரோனிலிருக்கும் சமபூமியில் குடியிருந்தார்கள்.… Continue reading மலர் :1 இதழ் 14 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – I

Bible Study

மலர்: 1 இதழ் : 13 மிகுந்த ஆஸ்தி! மோசம் ஆச்சு!

ஆதி ; 12 : 16 – 20         தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவனுடைய சித்தத்துக்கு  மாறாய் எகிப்துக்கு போய், தேவனை மகிமைப்படுத்தாமல், சொந்த முயற்சியில் பிரச்சனைகளை தீர்க்க,   முயன்று, பேராபத்தில் சிக்கிய ஆபிராம், சாராய்  தம்பதியினரை தேவன் தம் கிருபையால் தப்புவித்தார். இந்த சம்பவத்தை திரும்பிப் படிக்கும்போது ஒரு காரியம் கண்ணைப் பறிக்கிறது. சாராயின் அழகில் மயங்கிய பார்வோன் அவளுக்கும், ஆபிராமுக்கும்,பரிசாக ஆடு மாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும், வெள்ளியும்,… Continue reading மலர்: 1 இதழ் : 13 மிகுந்த ஆஸ்தி! மோசம் ஆச்சு!

Bible Study

மலர்: 1 இதழ் : 12 ஆசீர்வாதமாய் இரு! சாபமாய் அல்ல!

  ஆதி: 12: 16-20   தயவு செய்து வேதத்தை வாசியுங்கள்! ஆபிராமும், சாராயும் தேவனால் அழைக்கப்பட்டார்கள், வழி நடத்தப்பட்டார்கள், ஆனால் போகும் வழியில், பஞ்சம் என்ற தடை வந்தவுடன் அவர்கள் வாழ்க்கை என்னும் பயணத்தை கானானை நோக்கி தொடராமல், எகிப்தை நோக்கி தொடர்ந்தனர். அங்கு ஆபிராம் தன் மனைவியின் அழகால் தனக்கு ஆபத்து என்று எண்ணி அவளை தன் சகோதரி என்று சொல்லபோய், அவள் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். சாராயை ஒரு கணம் நோக்கிய பார்வோன்… Continue reading மலர்: 1 இதழ் : 12 ஆசீர்வாதமாய் இரு! சாபமாய் அல்ல!

Bible Study

மலர்: 1 இதழ் 11: வழி விலகிப்போதல்

ஆதி ; 12 : 5 – 15   தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்.   ஆபிராம் சாராயுடைய குடும்ப வண்டியின் சக்கரம் வேகமாய் சுழன்றன!  ஆபிராம் மோரே என்ற சமபூமிக்கு வந்த போது கர்த்தர் தரிசனமாகி ‘ உன்  சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் ’ என்றார். ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே பிரயாணம் பண்ணினான். புழுதியான பாதையில் வாண்டியன் சக்கரகள் கானான் தேசத்தை நோக்கி வேகமாக சேற்று கொண்டிருக்கும்போது, அந்ததேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று                     (… Continue reading மலர்: 1 இதழ் 11: வழி விலகிப்போதல்