Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 4 இதழ் 297 இருதயத்திலிருந்து பேசு!

1 சாமுவேல்: 1: 13  " அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;" அன்னாள் தன்னுடைய கனவுகள் நொறுங்கிப் போனவளாய், இருதயம் உடைந்தவளாய், தேவனுடைய சமுகத்துக்கு வந்தாள். அவள் மேல் எறியப்பட்ட வார்த்தைகள் அவளை அம்பு போல குத்தின. எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வேதனை நிறைந்தவளாய், கண்களில் நீர் பனிக்க தன் 'இருதயத்திலே பேசினாள் ' என்று பார்க்கிறோம். அன்னாளின் ஜெபத்தைப் பற்றி நாம்… Continue reading மலர் 4 இதழ் 297 இருதயத்திலிருந்து பேசு!

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 4 இதழ் 296 பொருத்தனை – வார்த்தையால் கனம் பண்ணுதல்!

1 சாமுவேல் 1: 11 ".... ஒரு பொருத்தனை பண்ணினாள்" பொருத்தனை என்ற வார்த்தையைக் கேட்ட வுடன் என் நினைவுக்கு வருவது முரட்டுத்தனமான யெப்தாவின் பொருத்தனைதான்  (நியா:11;30 ). நாம் அவனைப் பற்றியும், அவனுடைய பொருத்தனைக்கு பலியான அவன் குமாரத்தியைப் பற்றியும் பல நாட்கள் படித்தோம். பொருத்தனை என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் சற்று பயமூட்டும் வார்த்தையே. அநேக நேரங்களில் உணர்ச்சிவசமாக நான் இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்று நாம் கர்த்தரிடம் பொருத்தனை… Continue reading மலர் 4 இதழ் 296 பொருத்தனை – வார்த்தையால் கனம் பண்ணுதல்!

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 295 நீ ஒருபோதும் மறக்கப்படுவதில்லை!

1 சாமுவேல்: 1: 11 "சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி,.." மறதி!   இப்பொழுதெல்லாம் அநேக காரியங்கள் மறந்து போய் விடுகின்றன என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு!  எதையோ சொல்ல வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே அல்லது எதையோ வாங்க வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே,  ஐயோ, அவரை நன்றாகத் தெரியும் பெயர் தான் மறந்து போய் விட்டது! இப்படிபட்ட… Continue reading மலர் 3 இதழ் 295 நீ ஒருபோதும் மறக்கப்படுவதில்லை!

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 294 கண்ணீரைத் துடைக்க காத்திருக்கிறார்!

1 சாமுவேல்: 1: 10  அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: அன்னாளிடமிருந்து  அந்தரங்க, அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று  கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம்  பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று  கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி… Continue reading மலர் 3 இதழ் 294 கண்ணீரைத் துடைக்க காத்திருக்கிறார்!

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 293 கலங்கிய தியங்கிய வாழ்க்கையா?

1 சாமுவேல் 1: 9  " சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்..." போன வாரம் நம்முடைய தியானத்தில் கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் பெருந்தன்மையைப் பற்றிப் படித்தோம். இன்றையிலிருந்து சில நாட்கள் நாம் அன்னாள் தேவனுடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பற்றிப் பார்க்கலாம் "என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?" (சங்:42:5) என்று கூறிய சங்கீதக்காரனைப் போல என்றாவது உன் வாழ்க்கையில் உன் ஆத்துமா கலங்கியிருக்கிறாயா? அன்னாள் பல நாட்கள் வண்டியில்… Continue reading மலர் 3 இதழ் 293 கலங்கிய தியங்கிய வாழ்க்கையா?

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 292 தவறை ஒப்புக்கொள்வது பெருந்தன்மை!

 1 சாமுவேல்: 1:17 "அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்." என்னுடைய 35 வருட ஊழிய அனுபவத்தில் அநேக கிறிஸ்தவ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்வதே இல்லை ஏனெனில் அவ்வாறு ஒப்புக்கொண்டால் அது தங்களுக்கு அவமானம் என்று நினைக்கின்றனர். அது அவமானம் இல்லை பெருந்தன்மை என்பது யாருக்கும் புரிவதே இல்லை! இந்தத் தவறான எண்ணம் ஏன் நம்மில் அனைவரிடம்… Continue reading மலர் 3 இதழ் 292 தவறை ஒப்புக்கொள்வது பெருந்தன்மை!

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 291 குற்றம் சுமத்தும் ஆள்காட்டி விரல்!

1 சாமுவேல் : 1:14 " நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்." இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துதல்கள்! பல மாதங்களுக்கு பின்னர் இந்த தியானத்தைத் தமிழில் தொடரக் கர்த்தர் கொடுத்தக் கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தோம். தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மமடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக்… Continue reading மலர் 3 இதழ் 291 குற்றம் சுமத்தும் ஆள்காட்டி விரல்!