ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்.… Continue reading மலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே!
Month: February 2016
மலர் 6 இதழ் 334 காரிருள் சூழ்ந்த வேளையில்!
ஆதி: 39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.” யாக்கோபின் செல்லக் குமாரனாகிய யோசேப்பு திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான். அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல்காற்றும், மின்னலும், இடியும் எங்கிருந்து வந்தன! ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை… Continue reading மலர் 6 இதழ் 334 காரிருள் சூழ்ந்த வேளையில்!
மலர் 6 இதழ் 333 அழகிய சூழல்! யாரும் பார்க்காத தனிமை!
ஆதி: 39:14 – 15 “ அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன், நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள்” போத்திபாரின் மனைவியை யோசேப்பின் சௌந்தர்யம், இளமை, திறமை, அனைத்தும் காந்தம் போல கவர்ந்தன! வீட்டின் பொறுப்புகளை திறமையாக கவனித்த அவனை… Continue reading மலர் 6 இதழ் 333 அழகிய சூழல்! யாரும் பார்க்காத தனிமை!
மலர் 6 இதழ் 332 பாவத்தை அனுசரித்துப் போவது தவறா என்ன?
ஆதி: 39:7 “சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்” நாம் இடையில் யூதா, தாமாரின் கதையில் கவனம் செலுத்திவிட்டோம்! யாக்கோபின் செல்லக் குமாரன் யோசேப்பு என்ன ஆனான்? யோசேப்பை ஏற்றிக் கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது. யாக்கோபுவுக்கும், ராகேலுக்கும் பிறந்த பதினேழு வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்! ஒரு புதிய நாட்டில், புதிய மக்கள் மத்தியில் வாழப்போகிற இந்த… Continue reading மலர் 6 இதழ் 332 பாவத்தை அனுசரித்துப் போவது தவறா என்ன?
மலர் 6 இதழ் 331 குற்றம் சாட்டிய ஆள்காட்டி விரல்!
ஆதி: 38: 25 – 26 “ அவள் (தாமார்) வெளியே கொண்டுவரப் பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்த பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், இந்த கோலும், இந்த ஆரமும் யாருடைவகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளை பார்த்தறிந்து, என்னிலும் அவள் நீதியுள்ளவள், அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளை சேரவில்லை.” நாம் யூதாவைப்… Continue reading மலர் 6 இதழ் 331 குற்றம் சாட்டிய ஆள்காட்டி விரல்!
மலர் 6 இதழ் 330 ஒருவரின் சுயநலத்தினால் பாதிக்கப்பட்டவள்!
ஆதி: 38:16 “( யூதா ) அந்தவழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடம் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள்.” தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்து தன்னை வேசியைப்போல அலங்கரித்து, முக்காடிட்டு, திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமர்ந்தாள் என்று பார்த்தோம். ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்கும் காலம் அது, ஆதலால் யூதா தன் சிநேகிதனுடன் சேர்ந்து தன் மந்தையை மயிர்கத்தரிப்பதர்காக திம்னாவுக்கு… Continue reading மலர் 6 இதழ் 330 ஒருவரின் சுயநலத்தினால் பாதிக்கப்பட்டவள்!
On this Sunday evening while walking in the garden I found a pebble which looked round and beautiful. Immediately I reached to take it in my hand. But I was shocked to see the stone that looked so beautiful from outside was just hollow. When I held it in my hand I thought how many… Continue reading
மலர் 6 இதழ் 329 முக்காடிட்டு வேஷம் தரித்த ஒரு பெண்!
ஆதி: 38:14,15 “ சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாக கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்கு போகிற வழியிலிருக்கிற நீருற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்த படியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து” நேற்று நாம் தாமாருக்கு இழைக்கப் பட்ட அநியாயத்தை கர்த்தர் கண்டார் என்று பார்த்தோம். இன்றைய வேத பகுதியில் நான் தாமார் நடந்து… Continue reading மலர் 6 இதழ் 329 முக்காடிட்டு வேஷம் தரித்த ஒரு பெண்!
மலர் 6 இதழ் 328 உனக்கு இழைக்கப் படும் அநீதியை கர்த்தர் அறிவார்!
ஆதி: 38:6,7 “யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.” நேற்று நாம் யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்று போட்டதைப் பற்றி பார்த்தோம். யோசேப்பின் வாழ்வை நாம் தொடரு முன் வேதத்தில் தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் (மத்: 1:3) இடம்… Continue reading மலர் 6 இதழ் 328 உனக்கு இழைக்கப் படும் அநீதியை கர்த்தர் அறிவார்!
மலர் 6 இதழ் 327 நம் பிள்ளைகளுக்குள் பகையா? யார் காரணம்?
ஆதி: 37:3 “ இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்கு பிறந்ததினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்கு பலவருணமான அங்கியை செய்வித்தான்” அப்பாவுக்குத் தம்பியை தான் மிகவும் பிடிக்கும், அவனுக்குத் தான் எல்லாம் செய்வார்கள், அம்மாவுக்கு அக்கா தான் உயிர், அவளுக்குத்தான் எல்லாம் கிடைக்கும், நான் என்றால் ஆகாது... என்றெல்லாம் பிள்ளைகள் குறை கூறுவதை கேட்கிறோம். இந்த பிள்ளைகள் தாய் தகப்பனை நேசித்தாலும், அந்த பாசத்தின் நுனியில் ஒரு சிறிய மனஸ்தாபம்.… Continue reading மலர் 6 இதழ் 327 நம் பிள்ளைகளுக்குள் பகையா? யார் காரணம்?
