யோசுவா: 1: 9 நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..” மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன். யாத்திராகமம் 3 ம் அதிகாரத்திலிருந்து உபாகமம் 34 ம் அதிகாரம் வரை வேதத்தில் மோசேயுடைய ஊழியத்தைபற்றிப் படிக்கிறோம். நீண்ட காலம் தலைவராயிருந்த மோசேயை இழந்ததும் மக்கள் துக்கமடைந்தனர். இன்னும் வனாந்தரத்தை தாண்டவில்லை! யோர்தானைக் கடக்க வேண்டும்! எதிரிகளை முறியடிக்கவேண்டும்! கானானை… Continue reading மலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்!
Month: June 2016
மலர் 6 இதழ் 411 நித்திய புயங்கள் உன் ஆதாரம்!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர் நமக்கு உதவி… Continue reading மலர் 6 இதழ் 411 நித்திய புயங்கள் உன் ஆதாரம்!
மலர் 6 இதழ் 410: நம்மை போதிக்கும் வார்த்தை!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.” நாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கடைசி உபதேசத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்றும், நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை… Continue reading மலர் 6 இதழ் 410: நம்மை போதிக்கும் வார்த்தை!
மலர் 6 இதழ்: 409 – கால்களை இறுகப் பற்றிக் கொள்!
உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து...” மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம். ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல… Continue reading மலர் 6 இதழ்: 409 – கால்களை இறுகப் பற்றிக் கொள்!
மலர் 6 இதழ்: 408 – நான் அறிந்த கன்மலை!
உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” நாங்கள் இஸ்ரவேலில் கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல், யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சகோதரி, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள், எங்களிடம் வந்து கேமராவை வாங்கி சேர்ந்து நில்லுங்கள் நான் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி எங்கள் இருவரையும் படம் எடுத்ததுமட்டுமல்லாமல்,… Continue reading மலர் 6 இதழ்: 408 – நான் அறிந்த கன்மலை!
மலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன???
உபாகமம்: 28:15 ” இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.” கதைப் புத்தகங்களில் மந்திரவாதியின் சாபத்தினால் மனிதன் பூனையாவதைப் பற்றி படித்திருக்கிறேன்! ஏழை எளிய மக்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளும்போது நீ மண்ணாய் போவாய், நீ விளங்காமல் போவாய், என்று சாபமிடுவதையும் கண்களால் பார்த்திருக்கிறேன். என்னுடைய சொந்த கிராமத்தில் ஒரு… Continue reading மலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன???
மலர் 6 இதழ்: 406 – தலைமைத்துவம் என்னும் ஆசீர்வாதம்!
உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும், அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.” நான் அலுவலகத்துக்கு போகும் வழியில் வயல்வெளிகள் உள்ளன! நீர்ப்பாய்ச்சியிருக்கும் வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில் தான்… Continue reading மலர் 6 இதழ்: 406 – தலைமைத்துவம் என்னும் ஆசீர்வாதம்!
மலர் 6 இதழ்: 405 – ஏற்ற காலத்தில் பெய்யும் மழை!
உபாகமம்: 28:12 ஏற்றகாலத்திலே உன் தேசத்திலே மழை பெய்யும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார். இந்த வருடம் மே மாதம் கடுமையாக மழை பெய்த பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன். எங்கே மழை மறுபடியும் சென்னையை வெள்ளத்தில் ஆழ்த்திவிடுமோ என்ற பயத்தில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மே மாத உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவித்த மக்களுக்கு அந்த மழை தேவைப் பட்டதல்லவா! சில வருடங்களுக்கு முன்னர்… Continue reading மலர் 6 இதழ்: 405 – ஏற்ற காலத்தில் பெய்யும் மழை!
மலர் 6 இதழ்: 404 – உன் மூலம் பரவும் சுகந்த வாசனை!
உபாகமம்: 28:10 ”அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.” நான் கல்லூரியில் படித்த நாட்களில் நாங்கள் அனைவரும் பயந்த ஒரு பேராசிரியை இருந்தார்கள். அவர்களைக் கண்டால் பயம் என்றவுடன் அவர்களைப்பற்றி தவறாக நினைத்துவிடாதீர்கள். மரியாதையால் வந்த பயம். அழகும், நவீனமும், அறிவும், திறமையும் கொண்ட அவர்களை எங்கள் எல்லாருடைய உள்ளத்திலும் இடம் பிடித்துவிட்டார்கள். யாருடைய வகுப்பை தவற விட்டாலும் சரி, அவர்கள் வகுப்புக்கு சரியாக போய்விடுவோம், வேலையை சரியாக… Continue reading மலர் 6 இதழ்: 404 – உன் மூலம் பரவும் சுகந்த வாசனை!
மலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி?
உபா:28:9 ”நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்”. நான் வாலிப நாட்களில் தேவனை அதிகமாய் அறிகிற ஆவலில் அநேக சபைகளுக்கு சென்றிருக்கிறேன். வெண்மை வஸ்திரம் தரித்து ஆலயத்துக்கு வருபவர்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணியதுண்டு! பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசினால் நாம் பாவிகளாகி விடுவோம் என்று எண்ணிய பரிசுத்தவான்களையும் பார்த்திருக்கிறேன். நீண்ட ஜெபம் செய்தவர்களும், நீண்ட அங்கி தரித்தவர்களும் கூட என்னுடைய பரிசுத்தவான்கள்… Continue reading மலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி?
