2 சாமுவேல்: 7: 15 உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினது போல அவனைவிட்டு விலக்கமாட்டேன். பரலோகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்ற தாவீதிடம் கர்த்தருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லும் கர்த்தருக்கு உன்னிடமும் பெரிய எதிர்பார்ப்பு உண்டு! சங்கீதம் 139:16 ல் என் கருவை உம் கண்கள் கண்டது. என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்.... உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது என்ற தாவீதின் வார்த்தைகள் எனக்கு பயத்தைக் கொடுக்கும்… Continue reading இதழ்: 697 விசேஷமான எதிர்பார்ப்பு!
Month: June 2019
இதழ்: 696 தலைமுறைக்கான ஆசீர்வாதம்!
2 சாமுவேல்: 7: 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தை நிலைபடுத்துவேன். இங்கு தாவீதுக்கு கர்த்தர் ஒரு பெரிய ஆசீர்வாதமான வாக்குத்தத்தைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவனுடைய தலைமுறைக்கான ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வேலைகளை விட்டு இளைப்பாறி, கர்த்தரோடு உறவாடி அவரை நோக்கிப்பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்கள்மீது அதிக அக்கறையும் பாசமும்… Continue reading இதழ்: 696 தலைமுறைக்கான ஆசீர்வாதம்!
இதழ்: 695 எவைகள் முக்கியம்?
2 சாமுவேல்: 7: 8,9 இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். 2 சாமுவேல் 7: 8-29 தேவனுடைய சித்தத்துக்குள் நாம் நடக்கும் போது… Continue reading இதழ்: 695 எவைகள் முக்கியம்?
இதழ்: 694 மேல் நோக்கிய தரிசனம்!
2 சாமுவேல் 7: 2,3 ராஜா தீர்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது,தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான். அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும். கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான். உங்களுடைய மனதில் என்றாவது ஒரு பாரம் அழுத்துவது போல உணர்ந்திருக்கிறீர்களா? ஆனால் அது என்ன பாரம் என்றே தெரியவில்லை அல்லவா? ஒருவேளை யாருக்கோ ஒருவருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது என்ற… Continue reading இதழ்: 694 மேல் நோக்கிய தரிசனம்!
இதழ்: 693 அவர் தரும் இளைப்பாறுதல்!
2 சாமுவேல் 7:1 கர்த்தர் ராஜாவைச் சுற்றியிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது... நான் என்னுடைய அவசரத்தால் 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் உள்ள தாவீதும் பத்சேபாளும் கதைக்குத் தாவ முயன்றபோது கர்த்தர் அஅற்கு தடைபோட்டர். தாவீதுக்கும் மீகாளுக்கும் வாரிசு இல்லாமல் இருந்தது என்பதை முடித்தவுடன், தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் ஒரு வாரிசு பிறந்ததை ஆரம்பிக்க நினைத்த என்னை கர்த்தர் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் உள்ள அதிகாரங்களை படிக்கத் தூண்டினார். 2 சாமுவேல்… Continue reading இதழ்: 693 அவர் தரும் இளைப்பாறுதல்!
இதழ்: 692 நம்மைக் கொல்லும் தனிமை!
2 சாமுவேல் 6: 23 அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. தனிமை என்னைக் கொல்கிறது என்று சொல்லும் அநேகரைப் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையின் கொடுமையால் தனிமைக்குள் தள்ளப்பட்டவர்கள், பிள்ளைகளோடு வாழ மறுத்து தனிமையைத் தெரிந்து கொண்டவர்கள் என்று பலரைப் பார்த்திருக்கிறேன். இந்த அதிகாரத்தின் கடைசி வசனமாகிய இன்றைய வசனம் கூறுகிறது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு குழந்தை இல்லை என்று. மீகாள் என்ற பெயரின் அர்த்தம், ஒரு நீரோடை என்பதுதான். அவள் வாழ்க்கையில்… Continue reading இதழ்: 692 நம்மைக் கொல்லும் தனிமை!
