நம்முடைய ஜெபம் தேவனைக் கிரியை செய்ய வைக்கும்!
“ எலியா என்பவன் நம்மைப் போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதப்படிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும், ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை.
மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது பூமி தன் பலனைத் தந்தது. (யாக்கோபு: 5: 17,18)
நம்மைப் போல தினசரி பாடுள்ள சாதாரண ஒரு மனிதனின் ஜெபத்துக்கு கர்த்தரை கிரியை செய்ய வைக்க வல்லமையுண்டு என்று பார்க்கிறோம். எலியா ஜெபித்ததால் கர்த்தர் வானத்தை அடைத்தார், மறுபடியும் அவன் ஜெபித்ததால் வானத்தைத் திறந்தார்!
இதை வாசிக்கும்போது ஒரு சாதாரண மனிதனுடைய ஜெபத்துக்கு கர்த்தர் எப்படி செவி சாய்க்கிறார் என்று உணர முடிகிறது அல்லவா? எலியா நம்மைப்போல பாடுகளும் பெலவீனங்களும் உள்ள ஒரு சாதாரண மனிதன் தான்! தேவனை விசுவாசித்ததால் அவனால் வானத்தை அடைக்கவும் திறக்கவும் முடிந்தது!
உங்களுக்கு தேவனுடைய சமுகத்தில் காத்திருந்து அவருடைய வல்லமையான பதிலைப் பெற்ற அனுபவம் உண்டா? இன்று நாம் ஒன்று சேர்ந்து ஜெபிப்போம் வாருங்கள்!
தேவனாகிய கர்த்தர் நம்மை வாதிக்கும், பயமுறுத்தும் இந்தக் கொரொனா என்ற கொள்ளைநோய் பறந்தோடச் செய்ய ஜெபிப்போம். இதனால் ஏற்ப்பட்ட இழப்புகள், பஞ்சம், பசி இவைகளைக் கர்த்தர் கண்ணோக்கிப் பார்க்க ஜெபிப்போம். வேலையிழந்த மக்களுக்காக ஜெபிப்போம். திறக்கப்படும் திருச்சபைகளில் மக்கள் பாதுகாப்போடே தேவனை ஆராதிக்க வேண்டி ஜெபிப்போம்.
ஏதாவது விசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premasunderraj@gmail.com விலாசத்துக்கு அனுப்புங்கள்.
பிரேமா சுந்தர் ராஜ்