தேவனை இரக்கம் காட்ட வைத்த ஜெபம்
யோனா: 2:1,10 ”அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா, தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி ….. கர்த்தர் மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவை கரையிலே கக்கி விட்டது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம்முடைய ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள்.
இன்று காலை ஒரு அருமையான தேவனுடைய ஊழியர் கொரானாவினால் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்று கேள்விப்பட்டு மனம் உடைந்தோம். கர்த்தாவே எங்கள் ஜெபத்தைக் கேட்டு எங்கள் மேல் கிருபையாய் இரங்கி, இந்த கொள்ளை நோய் பரவாமல் ஒரு அற்புதத்தை செய்ய மாட்டீரா என்று மனம் பதறிற்று!
இன்றைய வேத வசனத்தில், யோனா தேவனுக்கு கீழ்ப்படியாமல் ஓடினாலும்,, மனந்திருந்தி தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணியபோது கர்த்தர் அவனை விழுங்கியிருந்த மீனின் வயிற்றிலிருந்த யோனாவைக் காப்பாற்றினார். நாமும் மனந்திருந்தி தேவனிடம் நெருங்கினால் தேவன் தம்முடைய அநாதி சிநேகத்தாலும், தம்முடைய மிகுந்த கிருபையினாலும் நம்மைக் காப்பாற்றுவார்.
விசேஷமாக இந்த கொரொனா என்ற கொடிய கொள்ளை நோய் இனிமேலும் யாரையும் விழுங்கிவிடாதபடி தேவனை நோக்கி ஜெபிப்போம். ஒருமணி நேரம் என்னோடு சேர்ந்து இன்று ஜெபியுங்கள்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்