1 சாமுவேல்: 1: 9,10 “சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: என்ன குடும்பம் இந்த எல்க்கானாவின் குடும்பம் !!!!!!! அன்பு மனைவி அன்னாள் ஒருபுறம்! பிள்ளை பெற்றுக் கொடுக்க மணந்த பெனின்னாள் ஒருபுறம்! பிள்ளைகளை பெற்றுக் கொடுத்தாலும் அவளால், எல்க்கானாவின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை, அதனால் அவள் கணவனின்… Continue reading இதழ்:1268 கண்ணீரே எந்தன் உணவாயிற்று!
Month: September 2021
இதழ்:1267 அஸ்திபாரமேயின்று ஆடிய குடும்பம்!
1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள். இன்று அதிகாலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது கடந்த நாட்களை சற்று திரும்பிப் பார்த்தேன். மிகச் சிறிய வருமானம் இருந்த காலங்களில் கூட மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படாமல், பெரிதாக எதற்காகவும் ஆசைப்படாமல், இயேசுவின் அன்பு என்ற அஸ்திபாரத்தோடும் ஜெபம் என்ற கூரையோடும் கட்டப்பட்ட ஒரு நல்ல குடும்பத்தை தேவன் ஏற்படுத்திக் கொடுத்தற்காக என்… Continue reading இதழ்:1267 அஸ்திபாரமேயின்று ஆடிய குடும்பம்!
இதழ்:1266 உறவுக்குள் ஏற்படும் கீறல்!
1 சாமுவேல் 1: 4, 5 ” அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான். அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.” ஒருமுறை என்னுடைய கார் ஒன்று சர்வீஸுக்கு சென்ற போது சஸ்பென்ஷனில் ஏதாவது பிரச்சனையா என்று பார்க்க சொல்லியனுப்பினேன். காட்டிலும் மேட்டிலும் அசையாமல் ஏறும்படியாக அமைக்கப்பட்ட வண்டி அது. அப்படிப்பட்ட வண்டி சிறிது காலமாக ஒரு சிறிய பள்ளத்தில் இறங்கினாலும்… Continue reading இதழ்:1266 உறவுக்குள் ஏற்படும் கீறல்!
இதழ்:1265 வெறுமையான பாத்திரம்தானே நிரப்பப்படும்!
1 சாமுவேல் 1: 2 பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. அன்னாளின் வாழ்க்கையின் இந்தப்பகுதியை வசிக்கும் போது, என்னுடைய வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் நான் ஒன்றுக்குமே உதவாதவள் என்று எண்ணியிருக்கிறேனா என்ற எண்ணம் தான் எனக்குள் வந்தது! உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அப்படி நடந்தது உண்டா? யாராவது உங்களை உதவாக்கரை என்று திட்டியதால் நான் ஒன்றுக்குமே உதவாதவன் என்ற எண்ணம் வந்திருக்கலாம்! எனக்கு சரியான வேலை இல்லை, எனக்கு எந்த தாலந்தும் இல்லை, நான்… Continue reading இதழ்:1265 வெறுமையான பாத்திரம்தானே நிரப்பப்படும்!
இதழ்:1264 துணியை அரிக்கும் பூச்சி போன்றதுதான் பொறாமை!
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள். தமிழில் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழி ஒன்று உண்டு. நம்மில் பலருக்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப் பட்டே பழக்கம் ஆகிவிட்டது. பக்கத்து வீட்டு கிணற்றில் உள்ளத் தண்ணீரைப் பார்த்ததும் நம்மில் பலருக்குத் தாகம் எடுக்கும். இங்குதான் நம்முடைய அன்னாளின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கணவனை மணந்த இரு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் எதுவுமே சம நிலையில்… Continue reading இதழ்:1264 துணியை அரிக்கும் பூச்சி போன்றதுதான் பொறாமை!
இதழ்:1263 உன்னை அதிகமாக மதிக்கும் ஒரு தேவன்!
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள் இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்! ஒரு குடும்பம்! நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால் இப்படி வாழ்வது என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியாது. ஆனால் பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட… Continue reading இதழ்:1263 உன்னை அதிகமாக மதிக்கும் ஒரு தேவன்!
இதழ்:1262 இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம்!
1 சாமுவேல்: 1: 1, 2 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்கானா என்று பேர் ; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்;” இன்று நான் நகோமி, ரூத், போவாஸ் இவர்களின் குடும்பத்தை விட்டு, எல்க்கானா, அன்னாள், சாமுவேல் என்பவர்களின் குடும்பத்துக்குள் நுழையப் போகிறோம். ஆண் பெண் என்ற பாகுபாடு அதிகமாக ஆட்டம்… Continue reading இதழ்:1262 இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம்!
இதழ்:1261 ஆஆ!!!! அந்த ஒரு அயர்ந்த மாலைப் பொழுது!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாளைய தினம் ஒரு புதிய புத்தகத்தை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு சிறிய செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று கர்த்தர் என்னோடு பேசியதால் இன்று இதை எழுதுகிறேன். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால் அந்த இரவு முற்றிலும் மாறுபட்ட ஒரு இரவு! மத்தேயு கூறுகிறார் அந்த… Continue reading இதழ்:1261 ஆஆ!!!! அந்த ஒரு அயர்ந்த மாலைப் பொழுது!
இதழ்:1260 குடும்பம் என்னும் அழகிய மலர்த்தோட்டம்
ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” நாம் ரூத்தின் புத்தகத்தை இன்றோடு முடிக்கப் போகிறோம்! கடந்த முறை பெத்லெகேமுக்கு சென்றபோது மேய்ப்பர்கள் மந்தையைக் காத்த இடம் என்ற ஒரு பரந்த வெளிக்கு சென்றோம். அங்கு நடந்து கொண்டிருந்த போது அது ஒருகாலத்தில் போவாஸ், ரூத்துடைய வயல்வெளியாக இருந்த இடம் என்று சொன்னார்கள். இந்தமுறை ரூத்தின் புத்தகம் எழுதும் போது அந்த வயல்வெளி என் மனக்கண்களில் தோன்றியது!… Continue reading இதழ்:1260 குடும்பம் என்னும் அழகிய மலர்த்தோட்டம்
இதழ்:1259 கடினமான வாழ்வு கற்றுத்தந்த பொறுமை!
ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading இதழ்:1259 கடினமான வாழ்வு கற்றுத்தந்த பொறுமை!