ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. என்னுடைய வாலிப நாட்களில் நான் கடினமான மனசோர்புக்குள் சென்றிருக்கிறேன். ஒரு காலகட்டம் வரை சந்தோஷமாக இருந்த என்னுடைய சிறு குடும்பம் தொடர்ந்து நேர்ந்த இரண்டு மரணங்களால் நிலைகுலைந்தது. அது என் இருதயத்தில் ஆறாத புண்ணாக அமர்ந்து விட்டதால், நான் தெளிவற்ற எதிர்மறையான எண்ணங்களால் சிந்தையை சிதற விட்டேன்.… Continue reading இதழ்:1246 இருதய நிறைவால் உன் வாய் துதி பேசும்!
Month: August 2021
இதழ்:1245 புத்தம் புது ஆரம்பம்!
ரூத்: 1: 22 “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ கட்டுரையைப் படித்த போது ஆச்சரியப்படக்கூடிய ஒரு உண்மையை அறிந்தேன். ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில், இருதயத் துடிப்பானது நான்கே வாரங்களில் , அந்தக் குழந்தை யானது தன்னுடைய முதல் மூச்சு விடுமுன்னரே ,ஆரம்பித்து விடுகிறது என்பது தான் அது.… Continue reading இதழ்:1245 புத்தம் புது ஆரம்பம்!
இதழ்:1244 உதிர்ந்து போன உன் வாழ்வு துளிர் விட்டு மலரும்!
ரூத்: 1: 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; நாங்கள் சென்னையில் அநேக வருடங்கள் வாழ்ந்து விட்டோம். இங்கு வெயில் காலம், மழைகாலம் என்ற இரண்டு காலங்களைத் தவிர, வேறெந்த காலத்தையும் பார்த்ததில்லை. ஆனால் அமெரிக்க தேசத்தில் என் மகள் வாழும் பகுதியில் நான்கு காலங்களும் அழகாக மாற்றம் பெரும். நான் ஒருமுறை குளிர் காலம் முடிந்தபின்னர் வரும் இளவேனிற் காலத்தில் அங்கு இருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு மரமும்… Continue reading இதழ்:1244 உதிர்ந்து போன உன் வாழ்வு துளிர் விட்டு மலரும்!
இதழ்: 1243 கசப்பான வாழ்வு எப்படி தேனாக இனிக்கும்?
ரூத்: 1 : 19, 20 ” அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்து போனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.” இந்த புத்தகத்தை ராஜாவின் மலர்களுக்காக நான் எழுத ஆரம்பிக்குமுன், என்னிடம் யாராவது ரூத் என்ற புத்தகத்தைப்பற்றி சுருக்கமாக கூறும்படிக் கேட்டிருந்தால், ரூத்… Continue reading இதழ்: 1243 கசப்பான வாழ்வு எப்படி தேனாக இனிக்கும்?
இதழ்:1242 அப்பா உம்மையே நேசிப்பேன்!
ரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக் கற்பனைப் பண்ணிப் பார்த்தேன். அயல்நாட்டில், பிழைப்பைத்தேடி சென்ற இடத்தில் கணவனையும், இரு குமாரரையும் இழந்த ஒரு விதவை. இப்பொழுது எல்லாவற்றையும் இழந்த பின்னர்… Continue reading இதழ்:1242 அப்பா உம்மையே நேசிப்பேன்!
இதழ்: 1241 என் வாழ்வு கடவுளை எப்படி வெளிப்படுத்துகிறது?
ரூத்: 1: 16 “… உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” ஒருநாள் இண்டெர்னெட்டில் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி மருத்துவங்களைப் பற்றிய கேள்வி பதில்களுக்கு பதில் கொடுத்து என்னுடைய மருத்துவ அறிவை வளர்க்க சற்று முயற்சி செய்வேன். ஆனால் அன்று நான் பங்கு பெற்றது கொஞ்சம் வித்தியாசமானது. கேட்கப்படுகிற கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லும் விளையாட்டு. சில கேள்விகளுக்கு அநேகருடைய பதில் ஒரேமாதிரி இருந்தது. உதாரணமாக, 1.… Continue reading இதழ்: 1241 என் வாழ்வு கடவுளை எப்படி வெளிப்படுத்துகிறது?
இதழ்: 1240 நம் சபையை சேராதவர்களை நேசிக்கிறோமா?
ரூத்: 1: 16 “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவள்… நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை! அயல் நாடு! அவள் நம் சபையை சேர்ந்தவள் அல்ல! அவள் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட… Continue reading இதழ்: 1240 நம் சபையை சேராதவர்களை நேசிக்கிறோமா?
இதழ்:1239 நமக்கு வைக்கப்படும் கண்ணி!
ரூத்: 1:22 இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; என் கணவருடைய குடும்பத்தில் எந்த நல்ல காரியங்களிலும் எங்களுக்கு அழைப்பு இருந்ததே கிடையாது. காரணம் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்றாலே தாழ்ந்த ஜாதி என்றும், மேற்கத்திய மதத்தினர் என்றும் எண்ணம் உண்டு! எனக்குத் திருமணமானபோது அவர்கள் என்னிடம் பழகியவிதம் ஏதோ ஒரு அயல்நாட்டுப் பெண்ணை நடத்துவதுபோலத் தான் எனக்கு இருக்கும். இரண்டு அயல்நாட்டு… Continue reading இதழ்:1239 நமக்கு வைக்கப்படும் கண்ணி!
இதழ்: 1238 இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்!
ரூத்: 1: 14 ” ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள். என்னுடைய சிறியத் தோட்டத்தில் ஒரு பசலைக் கொடி வளர்ந்து வந்தது. அது தானாகவே அருகில் உள்ள ஒரு போகன்வில்லாவை சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வந்தது. கொஞ்ச நாட்களில் அந்த போகன்வில்லாவிடமிருந்து அந்தக் கொடியைப் பிரிக்கவே முடியாது போல பற்றி கொண்டிருந்தது. இன்று நான் ரூத் நகோமியைப் பற்றிக் கொண்டாள் என்ற இன்றைய வேதாகம வசனத்தை படித்த போது அந்த போகன்வில்லாக்குள்… Continue reading இதழ்: 1238 இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்!
இதழ்: 1237 இயேசு கற்பித்தார் ஒளி வீசவே ……..!
ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நகோமி தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது!ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று! ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்! தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அர்த்தம்… Continue reading இதழ்: 1237 இயேசு கற்பித்தார் ஒளி வீசவே ……..!