1 சாமுவேல் 18:15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். தாவீதின் வாழ்க்கையில் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்ததையும் அவன் புத்திமானாய் நடந்து கொள்வதையும் சவுல் கண்டு அவனுக்கு பயந்தான் என்று இன்றைய வசனம் சொல்கிறது. தாவீது செய்த எல்லா காரியங்களிலும் பரலோக தேவன் அளித்த ஞானம் புலப்பட்டது. அவனுடைய வாழ்க்கையின் மூலம் கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது. ஒருவேளை தாவீதின் முகத்தைப் பார்க்ககூட பயந்தானோ என்னவோ அதனால் சவுல் அவனைத் தொட பயந்து என்… Continue reading இதழ்:1324 உன் வாழ்வு உலகத்துக்கு எடுத்துக் கூறும் சாட்சி!
Month: December 2021
இதழ்:1323 ஆபத்தான விளையாட்டு!
1 சாமுவேல்: 18: 7 -9 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து .... இஸ்ரவேலில் கொண்டாட்டம்! பெண்கள் ஆடல் பாடலுடன் தாவீதின் வெற்றியைக் கொண்டாடினர். பெண்கள் தெருக்களில் கூடி சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாடுவதை சற்று மனக்கண்கள் முன்பு கொண்டுவாருங்கள்! எத்தனை களிப்பு! எத்தனை சிரிப்பு! எல்லா திசையிலும் கலகலவென்று… Continue reading இதழ்:1323 ஆபத்தான விளையாட்டு!
இதழ்:1322 கர்த்தரை நம்புவோர்க்கு சமாதனம் உண்டு!
1 சாமுவேல்: 18:6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலிமிருந்து ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும், கீதவாத்தியங்களோடும், சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். காலை எழுந்தவுடன் கவலையில்லாமல் பாடும் பறவைகளைக் கேட்டதுண்டா? காற்றினால் அசைவாடும் மரங்களின் ஆடல்பாடலைக் கேட்டதுண்டா? நிம்மதியாகப்புல்வெளியில் மேயும் மாடுகளைப் பார்த்ததுண்டா? இரவில் பளிச்சென்று மின்னும் நட்சத்திரங்களைக் கண்டதுண்டா? இவை எந்தக் கவலையும் இல்லாமல் எத்தனை சமாதானமாய், சந்தோஷமாய் இருக்கின்றன என்று நான் அடிக்கடி நினைப்பேன்!… Continue reading இதழ்:1322 கர்த்தரை நம்புவோர்க்கு சமாதனம் உண்டு!
இதழ்:1321 புத்திசாலியாய் நடந்து நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்!
1 சாமுவேல் 18:5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷர்மேல் அதிகாரியாக்கினான். அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். தாவீது கோலியாத்தை வென்றபின், சவுல் ராஜா, புத்திசாலியான தாவீதை தன் வசமாக்கி, அவனைத் தன் போர்ச்சேவகர்களுக்கு அதிகாரியாக்கினான் என்று இன்றைய வசனம் நமக்கு விளக்கி கூறுகிறது. தாவீதின் இந்த புதிய பதவி சவுலுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல, இஸ்ரவேலர் யாவரையும் அது பிரியப்படுத்தியது. ஏனெனில்… Continue reading இதழ்:1321 புத்திசாலியாய் நடந்து நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்!
இதழ்:1320 நம்மை அனுதினமும் அச்சுறுத்தும் பிரச்சனைகள்!
1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய வசனத்தை பாருங்கள்! கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று நமக்கு தெளிவாக காட்டுகிறது அல்லவா! இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம்.கோலியாத் தன்னுடைய பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் நின்று தாவீதை எதிர்கொண்ட இடம்… Continue reading இதழ்:1320 நம்மை அனுதினமும் அச்சுறுத்தும் பிரச்சனைகள்!
இதழ்:1319 அன்றிருந்த அதே தேவன் தான் இன்றும் நம்மோடிருக்கிறார்!
1 சாமுவேல் 17:37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். ஒருமுறை எங்களுடைய ரிசார்ட் இருக்கும் வால்பாறை அருகே கரடியால் தாக்கப்பட்ட ஒருவரின் படத்தை யாரோ அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் என் உடம்பு சிலிர்த்தது! வலது கையை கடித்து குதறியிருந்தது. என்னக் கொடூரமான மிருகம் என்று நினைத்தேன்! இரண்டுமுறை எங்கள் கார் முன்னால் கரடி குறுக்கே ஓடியததைப் பார்த்திருக்கிறேன். இன்றைய வசனத்தில், ஒருமுறை கரடி… Continue reading இதழ்:1319 அன்றிருந்த அதே தேவன் தான் இன்றும் நம்மோடிருக்கிறார்!
இதழ்:1318 நாம் தேவாதி தேவனின் சேவகர் அல்லவா?
1 சாமுவேல் 17:8 அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்துக்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும். நான் சிறு வயதில் இந்த தாவீது கோலியாத் கதையை எத்தனை முறை கேட்டிருப்பேன்! அதன்பின்னர் எத்தனையோமுறை இந்தக் கதையை வேதாகமத்திலிருந்து படித்துவிட்டேன். ஆனால் ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு தெரிந்த கதையை வாசிப்பது போல வாசித்துவிட்டு அதன் முக்கிய அம்சங்களை… Continue reading இதழ்:1318 நாம் தேவாதி தேவனின் சேவகர் அல்லவா?
இதழ்:1317 வண்ணத்துபூச்சியாக உருவாகிக்கொண்டிருக்கிறாய்!
1 சாமுவேல் 17: 36,37 அந்தச் சிங்கத்தையும், கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்.விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான். அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். என்னுடைய பேரன் Zac க்கு பிரியமான விளையாட்டு பில்டிங் பிளாக் (building blocks) வைத்து ரயில் பெட்டி கட்டுவதுதான். அவன் ஒவ்வொரு பெட்டியாக… Continue reading இதழ்:1317 வண்ணத்துபூச்சியாக உருவாகிக்கொண்டிருக்கிறாய்!
இதழ்:1316 அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையில் அமைதி!
1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான். ஒருமுறை அழகாக வர்ணம் தீட்டும் கலையில் தேர்ந்த இரண்டு கலைஞரிடம், அவரவர்க்கு பிரியமான ஒரு அமைதியான சூழலை வரையும்படி கேட்டனர். ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார். அது எத்தனை அருமையான அமைதியை காண்போருக்கு… Continue reading இதழ்:1316 அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையில் அமைதி!
இதழ்:1315 முகத்தை அல்ல உள்ளத்தின் அழகையே காணும் தேவன்!
1 சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றான். சரித்திரத்தில் நடக்கும் சம்பவங்களில் பல, மீண்டும் மீண்டும் நடப்பதை நம்மில் பலர் படித்திருக்கிறோம், கண்டுமிருக்கலாம். ஒரு நாட்டின் சரித்திரம் வேறொரு நாட்டில் நடக்க வாய்ப்புண்டு. அதைப்போல வேறொரு காலகட்டத்தில், வேறொரு இன மக்களிடம் நடந்த சம்பவங்கள் நாம் வேதத்தில்… Continue reading இதழ்:1315 முகத்தை அல்ல உள்ளத்தின் அழகையே காணும் தேவன்!
