Tamil Bible study

ஒரு முக்கிய அறிவிப்பு!!!!!

எனது அன்பின் சகோதர சகோதரிகளே!

2009 ல் நான் முதன் முதலில் இந்த இணைய தளத்தில், ராஜாவின் மலர்கள் என்ற பெயரில், தினசரி தியானத்தை எழுத ஆரம்பித்தது முதல் இன்றுவரை அதைத்தொடர, நான் நேசிக்கும் தேவன் எனக்குக் கொடுத்த பெலத்துக்காக அவருக்குக் கோடாகோடி துதிகளை ஏறெடுக்கிறேன்.

இந்த இணைய தளத்துக்கு வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி!

ராஜாவின் மலர்களில் ஒரு புதிய ஆரம்பத்தைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்! அது வீடியோ மூலமாக வேதாகமத்தை உங்களோடு சேர்ந்து படிப்பதற்கான முயற்சிதான்!

முதலில் நாம் அனைவரும் சேர்ந்து படிக்க நான் தெரிந்து கொண்ட புத்தகம், யோவானுக்கு கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்தின விசேஷம்! கடைசிகாலத்தில் நடக்கப்போகும் காரியங்களை கர்த்தர் இந்தப்புத்தகத்தின் மூலம் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்! அநேகர் இதைப் புரிந்து கொள்வது கடினம் என்று நினைக்கக்கூடிய ஒரு செய்தி இது!

இந்தப்புத்தகத்தை வீடியோ மூலமாகக் கற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமா??????

என்னுடைய நெதர்லண்ட் (Netherland friends) நண்பர்களே நீங்கள் இதைக் குறித்துக் கொள்ளுங்கள்! அனைவருக்கும் பகரத் தவறாதீகள்!

ஆவலோடு, ஜெபத்தோடு காத்திருங்கள்!!!!! சீக்கிரத்தில் ஆரம்பமாகும்!

கர்த்தர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்!

உங்கள் அன்பின் சகோதரி

Dr Prema Sunder Raj

Leave a comment