Tamil Bible study

இதழ்:2569 சரியான வழியில் நடக்க ஞானம் தாரும்!

ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான  சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும், அனுபவம் மிகுந்தவரும்… Continue reading இதழ்:2569 சரியான வழியில் நடக்க ஞானம் தாரும்!

Tamil Bible study

Study the Book of Revelation with me

Dear friends if you have ever wanted to understand and study the Book of Revelation, this is the time! In Rajavin Malargal we are publishing the study every Friday. Already two episodes are there. Kindly click the link below study with me! God bless you! Second episode Same link always https://www.youtube.com/@rajavinmalargal Dr Prema Sunder Raj

Tamil Bible study

இதழ்:2568 இருதயத்தின் அழகே உற்சாக ஆவியைத்தரும்!

ரூத்: 2: 10   “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”. ஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது. என்ன… Continue reading இதழ்:2568 இருதயத்தின் அழகே உற்சாக ஆவியைத்தரும்!

Tamil Bible study

இதழ்:2567 எதைத் தேடி அலைந்து திரிகிறாய்?

ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.” இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! நாம் காணும் ஒவ்வொரு நாளும் தேவன் நமக்களிக்கும் ஈவு என்பதை மறவாமல் அவருக்கு நன்றி செலுத்தி, இந்த மாதம் முழுவதும் நம்மை அவர் கரம் பிடித்து நடத்தும்படி அவரிடம் ஒப்புவிப்போம். நாம் ரூத்தைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரவேல்… Continue reading இதழ்:2567 எதைத் தேடி அலைந்து திரிகிறாய்?

Tamil Bible study

இதழ்:2566 விசுவாசமும் தைரியமும் தாரும்!

ரூத்: 1 : 16   “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;” கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை சிலுவை பரியந்தம் தாழ்த்தி, தம்முடைய பிதாவின் சித்தத்தின்படி, தம்மையே நமக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த நாள் இது! அவர் தம்முடைய மரணத்தின் மூலம் நமக்கு பெற்றுத்தந்த இரட்சிப்புக்காகவும், பாவத்தின்மேலும் மரணத்தின் மேலும் கொடுத்த ஜெயத்திற்காகவும் இன்று நாம் அவரை ஸ்தோத்தரிப்போம். நாம் ரூத்தின் சரித்திரத்தை தொடரலாம்! தாவீதின் கதையைக்கேளுங்க! பிள்ளைகளே தாவீதின்… Continue reading இதழ்:2566 விசுவாசமும் தைரியமும் தாரும்!

Tamil Bible study

இதழ்: 2565 நான் தவறவிட்ட ஒரு புதைபொருள்!

ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.” சில வருடங்களுக்கு  முன்னால் நாங்கள் குன்னூருக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல , சிவப்பு… Continue reading இதழ்: 2565 நான் தவறவிட்ட ஒரு புதைபொருள்!

Tamil Bible study

இதழ்:2564 முதிர் வயதில் ஆதரவு தேவையா?

ரூத்: 4:15 ” அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்”. வெளிப்படுத்தின விசேஷத்தை வீடியோ மூலம் கற்றுக் கொடுக்கக் கர்த்தர் செய்த உதவிக்காக அவரை ஸ்தோத்தரிக்கிறேன்! ஒவ்வொரு வெள்ளியும் இந்த வீடியோ ஒளிபரப்பாகும்! கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை க்ளிக் செய்து அதை subscribe செய்து கொள்ளுங்கள்1 https://www.youtube.com/@rajavinmalargal சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில்… Continue reading இதழ்:2564 முதிர் வயதில் ஆதரவு தேவையா?

Tamil Bible study

இதழ்:2563 இரட்சிப்பின் காலம் இது!

லேவியராகமம்: 25: 25  ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள்! இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். அன்று என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத்,  வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து… Continue reading இதழ்:2563 இரட்சிப்பின் காலம் இது!