வேதம் இன்றைய வேதாகமப் பகுதியில் தெளிவாக ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறது.
கர்மேலில் ஆடுகளுக்கு மயிர்க்கத்தரிக்கும் நேரம் அது. ஆடுகளுக்கு உணவைத்தேடி வனாந்திரங்களில் அலைந்த நாட்களின் பலனை இப்பொழுது அனுபவித்துக்கொண்டிருந்தனர். ஆடுகளை மேய்த்த மேய்ப்பர்களும், ஆடுகளின் சொந்தக்காரர்களும் ஒன்றாய்க் கூடியிருக்கும் காலம் அது, கோலாகலமான ஆர்ப்பரிப்பும், விருந்தும் கூட இருந்தது.
அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் நாபாலின் ஆடுகளைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றிய தாவீதுக்கும், அவனோடு சேர்ந்த வாலிபருக்கும் கைமாறு செய்திருக்கவேண்டிய வேண்டும். ஆனால் நாபால் அப்படி செய்யவில்லை. ஆதலால் தாவீது தன்னோடிருந்த பத்து வாலிபரை நாபாலிடம் அனுப்பி தாங்கள் நாபாலின் ஆடுகளைப் பாதுகாத்ததை அவனுக்கு நினைவு படுத்துகிறான்.
நாபால் தான் அவனுக்கு செய்த உதவியை நினைக்காமல் தன்னை உதறியபோது தாவீதின் உள்ளத்தில் ஏற்பட்ட வலியை நான்கூட என் வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறேன். நான் செய்த உதவிக்கு பதில் செய்யவேண்டும் என்று ஒருநாளும் நான் யாரிடமும் எதிர்பார்த்ததில்லை, ஆனால் அதற்கு நன்றியுள்ள இருதயத்தைத்தான் எதிர்பார்த்தேன்.
நாபால் எவ்வளவு முட்டாள், துராகிதன் என்று அறிந்திருந்தால் ஒருவேளை தாவீது தன் உதவிக்குப் பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டான் என்று ஒரு எண்ணம் எனக்குள் வந்தது. ஆனால் தாவீது அவனிடம் தான் செய்த உதவிக்கு கைமாறு எதிர்பார்த்தான்.
ஒரு நிமிஷம்! நாம் நமக்கு உதவி செய்தவர்களை எப்படி நடத்துகிறோம்?
அவர்கள் செய்த தயவுக்கு பதிலாக அவர்களுக்கு தயவு செய்கிறோமா அல்லது மறந்தே போய்விட்டோமா? அப்படி மறந்து போயிருப்போமானால் நாமும்கூட நாபாலைப் போல முட்டாள்தான் தான்!
நாளைக்குத் தொடர்ந்து படிப்போம்! நன்றியை எதிர்பார்த்த தாவீதுக்கு நாபால் அளித்த புத்தியற்ற பதில் என்ன விளைவை ஏற்படுத்தியது என்று!
நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒரு காரியம் இது. ஏனெனில் நாம் நம்முடைய ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு நன்றிகெட்ட நாபாலைக் கண்டிப்பாக சந்திப்போம்!
உங்கள் சகோதரி,
Dr பிரேமா சுந்தர் ராஜ்
வெளி 9 – ஐந்தாவது எக்காளம் – நரகம் கட்டவிழ்க்கப்பட்டது போன்ற துன்பம்!
காணத்தவறாதீர்கள்! பகிருங்கள்!
