நியாதிபதிகள்: 11:30,31 அப்பொழுது யெப்தா ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால் , நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது,என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச்சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். நீதிமொழிகளின் புத்தகத்தில் சாலொமோன் ராஜா மிகவும் ஞானமுள்ள , ” நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” (நீதி: 27:1) என்ற இந்த வார்த்தைகளை நமக்காகத்தான் கூறியிருப்பார் போலும்… Continue reading இதழ்:1186 நாளைக்கு நடக்கப் போவதை அறிவாயோ?
Category: Tamil Bible study
இதழ்: 1185 நம் பக்கமாய் காற்று வீசும்போது வரும் கர்வம்!
நியாதிபதிகள் 11: 4 – 6 “சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி, நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.” தன்னுடைய பழைய காலத்தை அறவே மறந்துவிட்டு, இன்றைக்கு தனக்குக் கிடைத்திருக்கிற பதவியை அல்லது வசதியை கையில் வைத்துக் கொண்டு தன்னையே மறந்து ஆட்டம் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீகளா? கிலெயாத் என்பவன்… Continue reading இதழ்: 1185 நம் பக்கமாய் காற்று வீசும்போது வரும் கர்வம்!
இதழ் 1184 உன்னை நொறுக்கி உருவாக்கும் குயவனிடம் ஒப்புவி!
நியாதிபதிகள்: 11: 1 “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.” ஒருமுறை என்னுடைய அப்பாவை இருதய சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் வைத்திருந்த போது, ஒரு நர்ஸ் வந்து அப்பாவின் கடந்த காலத்தைப் பற்றி எழுதினார்கள். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன பழக்கங்கள் இருந்தன? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். அப்பாவின் கடந்த காலத்துக்கும் அவருடைய இருதயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று என்னை சிந்திக்க வைத்தன அந்த நர்ஸின் கேள்விகள். நம்முடைய கடந்த… Continue reading இதழ் 1184 உன்னை நொறுக்கி உருவாக்கும் குயவனிடம் ஒப்புவி!
இதழ்: 1183 தன் நேரம்தான் சரி என்று நினைக்கும் கடிகாரம் போல!
நியா: 21:25 “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்”. கடந்த சில மாதங்களாக நாம் நியாதிபதிகளின் புத்தகத்தை படிக்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நடத்தையானது அவர்களுடைய தலைவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி அசைவாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். மோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுக்காரனாய் அனுப்பப்பட்ட காலேபின் மருமகன் ஒத்னியேல் என்பவன், காலேபைப் போலவே ஒரு தேவனுடைய மனிதனாய் இஸ்ரவேலை நல்வழியில் நடத்தியதைப் பார்த்தோம். கர்த்தரின் வழியில் நடத்திய ஒத்னியேல் மரித்தபின் மறுபடியும் மக்கள் தேவனை விட்டு பின்வாங்கிப்போனார்கள்.… Continue reading இதழ்: 1183 தன் நேரம்தான் சரி என்று நினைக்கும் கடிகாரம் போல!
இதழ்: 1182 நம்மை எச்சரிக்கும் ஒரு நாயகனின் வாழ்வு!
நியா: 8: 31- 35 ” சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான். பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருந்தாப்பியத்திலே மரித்து ஒப்ராவிலே தன் தகப்பனாகிய போவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கப்பண்ணப்பட்டான். கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய் பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய… Continue reading இதழ்: 1182 நம்மை எச்சரிக்கும் ஒரு நாயகனின் வாழ்வு!
இதழ்: 1181 ஒரே ஒரு தவறான அடி நம்மை சறுக்கி விடுமா?
நியா: 8: 30 ” கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்தக் கொடிய கால கட்டத்தில் நம்மை அற்புதமாக காத்து வழிநடத்தும் இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்! என் கணவரும் நானும் யூத் பார் க்ரைஸ்ட் (YFC) என்ற நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் பணி செய்தோம். இந்தியாவின் பல மாகாணங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் நான்கு வருடங்கள் ஊழியம் செய்த… Continue reading இதழ்: 1181 ஒரே ஒரு தவறான அடி நம்மை சறுக்கி விடுமா?
இதழ்: 1180 நல்ல நோக்கங்களும் நம்மைப் பழுதடையப் பண்ணும்!
நியா: 8: 27 “அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான். இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம் போனார்கள். அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று”. நல்ல எண்ணத்தோடு, உதவி செய்யும் நோக்கத்தோடு குடும்பத்துக்குள் ஏதாவது ஒரு பிரச்சனையில் தலையிட்டு அது உங்களுக்கே கெட்ட பெயரை வாங்கி கொடுத்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எனக்கு உண்டு! யார் எக்கேடோ கெட்டுப் போகட்டும் நமக்கென்ன என்று எண்ணாமல் நல்ல நோக்கத்தோடு தலையிட்ட பலனை… Continue reading இதழ்: 1180 நல்ல நோக்கங்களும் நம்மைப் பழுதடையப் பண்ணும்!
இதழ்: 1179 உன்னை ஆளுபவர் யார்?
நியா: 8: 22 ” அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.” என்னுடைய கல்லூரி நாட்களில், எனக்கு சரித்திர கதைப்புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் விசேஷமாக நம்மை ஆண்ட மன்னர்களின் கதைகள் மேல் தான் பிரியம். போரில் வெற்றி பெற்ற வீரர்களையும், கைகளில் செங்கோல் ஏந்திய மன்னர்களும் எனக்குப் பிடிக்கும். நான் மட்டுமல்ல! நம்மில் அநேகர் இவ்விதமாக… Continue reading இதழ்: 1179 உன்னை ஆளுபவர் யார்?
இதழ்: 1178 உன்னால் காண முடியாத உன் எதிர்காலம்!
நியா: 6: 12 “கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட தெபோராள், பாராக், யாகேல் என்ற மூவரைப் பற்றி நாம் படித்தோம். தெபோராளின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டோம். இப்பொழுது நியாதிபதிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் கிதியோனின் வாழ்க்கைக்கு கடந்து வருவோம். இதை நாம் படிக்கும்போது கிதியோன் எப்படியொரு சிக்கலான மனிதன் என்று தெரிந்து கொள்ளப்போகிறோம். நியாதிபதிகளின் புத்தகம் ஆறாவது அதிகாரம் “பின்னும் இஸ்ரவேல்… Continue reading இதழ்: 1178 உன்னால் காண முடியாத உன் எதிர்காலம்!
இதழ்: 1177 அலைகளை எதிர்த்து போராடும் கப்பல் போல!
நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில் கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்: 1177 அலைகளை எதிர்த்து போராடும் கப்பல் போல!
