2 சாமுவேல் 3: 12,13 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி , தேசம் யாருடையது? என்னோடே உடன்படிக்கை பண்ணும். இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான். அதற்கு தாவீது: நல்லது. உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் ஒரேகாரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும். நான் பலமுறை வேதத்தைப் படித்திருந்தாலும் ராஜாவின் மலர்களுக்கு… Continue reading இதழ்: 668 மிரட்டிப் பறிக்கும் குணம்!
Category: Tamil Bible study
இதழ்: 667 பதவியைத் தேடி ஓடாதே!
2 சாமுவேல் 3: 9-10 நான் ராஜ்யபாரத்தை சவுலின் குடும்பத்தைவிட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கி பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும், யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி, கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்கு செய்யாமற்போனால்..... அப்னேர் சவுலின் படைத்தலைவனாக இருந்தவன். சவுலின் எதிர்பாராத மரணத்துக்கு பின், அவன் சவுலின் குடும்பத்துக்குத் தன் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்தான். அவன் தேவன் தாவீதுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தை நன்கு அறிந்திருந்தான் என்று இன்றைய வேதாகமப்பகுதி நமக்குத் தெரிவிக்கிறது. ஏழறை வருடங்கள் சவுலின் குடும்பம்… Continue reading இதழ்: 667 பதவியைத் தேடி ஓடாதே!
இதழ்: 666 பெயரை அழிக்கும் அவதூறு!
2 சாமுவேல் 3: 7 - 8 சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்ன்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான். அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபம் கொண்டு....... என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யுதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா? தேர்தல் போர் என்ற தலைப்பில் அவ்வப்பொழுது செய்தி வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மைக்கு தட்டுபாடு ஆகிய… Continue reading இதழ்: 666 பெயரை அழிக்கும் அவதூறு!
இதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்!
2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான். தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம். இன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும் ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க… Continue reading இதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்!
இதழ்: 663 ஒரு உயர்ந்த மனிதனின் தாழ்ந்த மரணம்!
1 சாமுவேல் 31:1-6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.....சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது. வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள். அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி..... நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப்போடு என்றான். அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் தன் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். சவுல் ஒரு திறமைசாலி! நேர்முகமான நோக்கம் கொண்டவன்! எல்லாவற்றுக்கும் மேலாக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன்! ஆனால் என்ன நடந்தது… Continue reading இதழ்: 663 ஒரு உயர்ந்த மனிதனின் தாழ்ந்த மரணம்!
இதழ்: 662 பொய்யரின் உலகம்!
1 சாமுவேல்28: 11 - 13 அப்பொழுது அந்த ஸ்திரீ உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்....... ......தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். சவுல் இஸ்ரவேலை ஆளும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட முதல் ராஜா! எல்லோரையும் விட உயரமானவன்! கண்ணைக்கவரும் ஆணழகன்! இஸ்ரவேலர் எல்லோரும் பெருமை பாராட்டக்கூடிய திறமைசாலி! ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சவுலின் உண்மையான ரூபம் வெளிப்பட ஆரம்பித்தது. தாழ்மையான தலைவனாக இல்லாமல், முரட்டு குணமும்,… Continue reading இதழ்: 662 பொய்யரின் உலகம்!
இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?
1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து... ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள்… Continue reading இதழ் : 661 உன்னை வஞ்சிப்பவன் யார்?
இதழ்: 660 பொல்லாங்கை விட்டு விலகு!
1 சாமுவேல் 28:7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்.அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். குறி சொல்கிறவர்கள், பில்லி சூனியம் செய்கிறவர்கள், மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என்று பலவிதமானவர்கள் நம்முடைய நாட்டில் நம்மை சுற்றி இருக்கிறார்கள். விக்கிரகாராதனையாலும், ஆவிகளாலும் நடத்தப்படும் இவர்களைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. கர்த்தருடைய கட்டளைக்கு இணங்க, குறிசொல்லுபவர்களும்,… Continue reading இதழ்: 660 பொல்லாங்கை விட்டு விலகு!
இதழ்: 659 தீமையின் பலன் பயம்!
1 சாமுவேல் 28:3 - 5 சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப் போனான்..... பெலிஸ்தர் கூடிவந்து சூநேமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்ட போது பயந்தான். அவன் இருதயம் மிகவும் தத்தளித்த்துக் கொண்டிருந்தது. தாவீதின் வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடரும் முன், நான் சற்றுப் பின் 28 ம் அதிகாரத்துக்கு சென்று, சவுலின் வாழ்க்கையின் கடைசி பாகத்தைத் பற்றி சற்றுப் பார்க்கலாம் என்று யோசித்தேன். பெலிஸ்தர்… Continue reading இதழ்: 659 தீமையின் பலன் பயம்!
இதழ்: 658 இழந்ததை திருப்பிக்கொள்!
1 சாமுவேல்: 30 : 8,18 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர். அதை நீ பிடித்து சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். போன வாரம் நான் ஒரு வெப்சைட்பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நம் வீட்டில் நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற நிலையில் இருக்கும் மேஜை, நாற்காலி போன்ற… Continue reading இதழ்: 658 இழந்ததை திருப்பிக்கொள்!
