1 ராஜாக்கள் 15:11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதை போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். இன்றைய வேதாகமப் பகுதி ஒரு இருண்ட வேளையில் வீசும் ஒளிக்கதிர் போல உள்ளது. ஒவ்வொரு ராஜாக்களும் தேவனைப் பின்பற்றத் தவறிக் கொண்டிருந்த வேளையில் இந்த ஒரு மனிதன் தாவீதைப் போல கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானத செய்தான் என்று பார்க்கிறோம். தேவனை அறியாத, மற்றும் கர்த்தருக்கு கீழ்ப்படியாத மக்கள் வாழும் ஒரு பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நாம் எப்படி… Continue reading இதழ்:2305 இருளின் மத்தியில் ஓர் ஒளிக்கதிர்!
Category: Tamil Bible study
இதழ்:2304 பரலோக தேவன் யாவற்றையும் அறிவார்!
1 இராஜாக்கள் 16:1-3 பாஷாவுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்; நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால், இதோ நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துக்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களை ஒரு… Continue reading இதழ்:2304 பரலோக தேவன் யாவற்றையும் அறிவார்!
இதழ்:2302 மன்னிக்கும் போது நாம் கடவுளின் குணத்தை உடையவர்களாகிறோம்!
1 இராஜாக்கள் 15:25 -26 ... யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி....கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்து... தன் தகப்பன் பாவத்திலும்...நடந்தான். 28: பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான். 30: அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான். நம்முடைய காலத்தில் ஊழியம் செய்து சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த சுவிசேஷகர் பில்லி கிரஹாமுக்கு அடுத்தபடியாக உலக சுவிசேஷகர் என்று அழைக்கப்படும் பாஸ்டர் சார்ல்ஸ் சுவிண்டோல் அவர்களை… Continue reading இதழ்:2302 மன்னிக்கும் போது நாம் கடவுளின் குணத்தை உடையவர்களாகிறோம்!
இதழ்:2301 இன்று எது உன்னை ஆளுகை செய்து கொண்டிருக்கிறது?
1 இராஜாக்கள் 15:34 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பார்வையிலும் நடந்தான். இராஜாக்களில் என்னை மிகவும் குழப்ப வைப்பது இந்த இரண்டு பெயர்கள் தான்! நீங்களும் அப்படி நினைத்ததுண்டா? யெரொபெயாம் இஸ்ரவேலின் வட பகுதியை ஆள ஆரம்பித்தபோது, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதா, பென்யமீன் கோத்திரங்களின் சிங்காசனத்தில் அமர்ந்தான். இந்தப் புத்தகத்தில் 14 ம் அதிகாரத்திலிருந்து மறுபடியும், மறுபடியும் வரும் ஒரு வாக்கியம் என்னவென்றால், அவர்கள் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை… Continue reading இதழ்:2301 இன்று எது உன்னை ஆளுகை செய்து கொண்டிருக்கிறது?
இதழ்:2300 உன் நடத்தைக்கு நீயே பொறுப்பாளி!
1 இராஜாக்கள் 14:1-3 ,5,17 அக்காலத்திலே யெரோபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப்பார்த்து; நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ, இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்...... பிள்ளைக்கு சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான். கர்த்தர் அகியாவினிடத்தில்; இதோ யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க… Continue reading இதழ்:2300 உன் நடத்தைக்கு நீயே பொறுப்பாளி!
இதழ்:2299 தேவ பிரசன்னத்தை இழந்து போகாதே!
1 இராஜாக்கள் 14:1-3 அக்காலத்திலே யெரோபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப்பார்த்து; நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ, இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்...... பிள்ளைக்கு சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான். இன்று நாம் பார்க்கும் சம்பவம் ஒரு சோகமான ஒன்று! இதற்கு காரணம் யெரோபெயாம் தன்னை ராஜாவாக்கிய… Continue reading இதழ்:2299 தேவ பிரசன்னத்தை இழந்து போகாதே!
இதழ்:2298 பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை!
1 இராஜாக்கள் 12: 16 ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறு உத்தரவாக; தாவீதோடே எங்களுக்கு பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை, இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு, இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். இந்த வருடத்தின் ஐந்து மாதங்கள் கண்ணின் மணி போல காத்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். இந்த மாதம் முழுவதும் அவர் நம்மைக் காத்து பராமரிக்கும்… Continue reading இதழ்:2298 பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை!
இதழ்:2297 கர்த்தருடைய ஆலோசனையை தேடாமல் இருந்து விடாதே!
1 இராஜாக்கள் 12:8 முதியோர் தனக்கு சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணி நான் அன்று அந்த முடிவு எடுத்திராவிடில் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கும் என்று என்றாவது நினைத்த தருணம் உண்டா? ஒருவேளை அது ஒரு மிகச்சிறிய முடிவாக இருக்கலாம் அதனால் பெரிய பாதிப்பு இல்லாமல் போயிருந்திருக்கும். ஒரு பெரிய விஷயத்தில் நாம் எடுத்த முடிவு தவறாயிருந்திருந்தால் அது எவ்வளவுதூரம் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதித்திருக்கும்!… Continue reading இதழ்:2297 கர்த்தருடைய ஆலோசனையை தேடாமல் இருந்து விடாதே!
இதழ்:2296 மனுஷராகிய நம்மேல் விழுந்த கடமை!
1 இராஜாக்கள் 11:41 சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. நமக்கெல்லாருக்கும் நோபெல் பரிசு என்பது இந்த உலகத்தில் அமைதிக்காக போராடும் ஒருவருக்கு வழங்கப்படுவது தெரியும். அது ஆல்பிரட் நோபெல் என்ற விஞ்ஞானியின் பெயரால் கொடுக்கப்படுகிறது. அவரைப்பற்றிய ஒரு கட்டுரையை நான் ஒருமுறை வாசிக்க நேர்ந்த போது அவர் தான் டைனமைட் என்ற கொடூரமாக வெடிக்கக்கூடிய ஒரு வெடியைக் கண்டுபிடித்தவர் என்று அறிந்து இவர் பெயரில் அல்லவா… Continue reading இதழ்:2296 மனுஷராகிய நம்மேல் விழுந்த கடமை!
இதழ்:2295 படுகுழியில் விழாமலிருக்க தடுப்பு முறைகள்!
மத்தேயு 26:41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாங்கள் இப்பொழுது பெங்களூரு பட்டணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டிலிருந்து ஒரு 40 நிமிடங்களில் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விடலாம். ஆனால் அதற்கு போகிற வழிதான் பயங்கரமானது. சற்று கண்கள் அசதியானால் போதும், வண்டி ஏதாவது குழியில் இறங்கி ஏறிவிடும். மழை காலங்களில் எங்கே குழி இருக்கிறது என்று தெரியவும் செய்யாது. இன்று நாம் நான்காவது நாளாக சாலொமோனின் வாழ்க்கையிலிருந்து… Continue reading இதழ்:2295 படுகுழியில் விழாமலிருக்க தடுப்பு முறைகள்!
