2 சாமுவேல்: 12:7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன் தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான்! இஸ்ரவேலை ஆளும்படி தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட ராஜா, அவன் மகா வல்லமையுள்ளவனாய் இருந்தான்! அன்றைய தினம்,அரண்மனைக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். இந்தமுறை அந்த விருந்தாளி ஒன்றும் தேநீர் குடிக்க வரவில்லை! தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர்! முதலில் அவர் ஏதோ ஒரு பணக்காரனால் திருடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் கதையோடு வந்த மாதிரி இருந்தாலும், சீக்கிரமே அவர் வந்த காரியத்தின்… Continue reading இதழ்:2193 வலையில் சிக்கிய உன்னை விடுவிப்பார்!
Category: Tamil Bible study
இதழ்:2192 தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே கூடும்!
2 சாமுவேல் 12:6 அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். நாத்தான் கூறிய கதையின் மூலம் ஐசுவரியவான் ஒருவன் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்ததை அறிந்தவுடன் தாவீது அவன் மீது மிகவும் கோபப்பட்டு அவன் மரண தண்டனை பெற வேண்டும் என்று கூறியதை பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்பதைப் பார்க்கிறோம். இதைப்படிக்கும்போது லூக்கா 19 ல் நாம் வாசிக்கும் சகேயு… Continue reading இதழ்:2192 தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே கூடும்!
இதழ்:2191 கிருபையை நினைத்து நன்றியால் ஸ்தோத்தரி!
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். ராஜாவாகிய தாவீதுக்கு பயங்கர கோபம்! தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட வேண்டும் என்று நினைத்தான்… Continue reading இதழ்:2191 கிருபையை நினைத்து நன்றியால் ஸ்தோத்தரி!
இதழ்:2190 A VERY BLESSED AND HAPPY NEW YEAR 2025!
யோவான்: 14: 6 “அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” பல ஆண்டுகளுக்கு முன்னர் நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம். இப்பொழுதெல்லாம் புதிய கார்கள் GPS பொருத்தப்பட்டே வருகின்றன. ஆனால் அப்பொழுதெல்லாம் அப்படியல்ல. நாங்கள் எங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவியை வாங்கி பொருத்தியிருந்தோம். ஒருநாள் நாங்கள்… Continue reading இதழ்:2190 A VERY BLESSED AND HAPPY NEW YEAR 2025!
இதழ்: 2189 நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கர்த்தரிடம் கொடு!
உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பழைய ஏற்பாடு என்றால் மிகவும் பிரியம். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! நமக்கு இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் கடைசி… Continue reading இதழ்: 2189 நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கர்த்தரிடம் கொடு!
இதழ்:2188 புதைக்கப்பட வேண்டிய தாலந்து எது தெரியுமா?
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்தப் பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி.... நீ யாருடைய தவறையாவது சீர்திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ( மத்:7:1)என்று கர்த்தராகிய இயேசு சொன்னார். மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான் நம் கண்களில் படவே படாது. அப்படித்தான் தாவீதுக்கும் ஆகிவிட்டது. நாத்தான் தாவீதிடம்… Continue reading இதழ்:2188 புதைக்கப்பட வேண்டிய தாலந்து எது தெரியுமா?
இதழ்:2187 தேவதூதனின் சத்தம் கேட்டேன்!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை தான் அவனை தரித்திரன் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியைத் திருட வைத்தது. இன்றையதினம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுயநலமற்ற, இரக்க மனப்பான்மையை பற்றிப் பார்ப்போம். இது நாம் பார்த்த இச்சை, பெருமை… Continue reading இதழ்:2187 தேவதூதனின் சத்தம் கேட்டேன்!
இதழ்:2186 பாழும் கிணற்றுக்குள் தள்ளி விடும் இச்சைகள்!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான். ஆதியாகமத்தில் நாம் ஆபிரகாமின் குடும்பமும், லோத்தின் குடும்பமும் பலுகிப் பெருகிப்போனதைப் பார்க்கிறோம். இருவரும் பெரிய ஆஸ்தியை சேர்த்துவிட்டனர், அவர்களுடைய ஆடு மாடுகளுக்கு இடம் கொள்ளவில்லை. அதனால் ஆபிரகாம் தன்னுடைய குமாரனைப்போல இருந்த… Continue reading இதழ்:2186 பாழும் கிணற்றுக்குள் தள்ளி விடும் இச்சைகள்!
இதழ்:2185 கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
1 யோவான் 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும்படிக்குத் தேவன் அவரைஇவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அன்பின் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்! இன்றைய வேதாகமப் பகுதியில் இருந்து மூன்று காரியங்களை இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்! முதலாவது நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து அன்பு வெளிப்பட்டது! இரண்டாவது அந்த அன்பு இந்த உலகத்துக்கு வந்தது! மூன்றாவது அந்த அன்பு நாம் பிழைக்கும்படியாய் சிலுவை… Continue reading இதழ்:2185 கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
இதழ்: 2184 வார்த்தையானவர் மாம்சமான அதிசயம்!
மத்தேயு: 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். நாம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பெற்றோர் பெருமையுடன் குழந்தையின் பெயரை உறவினருக்கு அறிவிப்பார்கள் அல்லவா? இப்பொழுது நாம் படிக்கப்போகும் வேத பகுதியில் மத்தேயு நமக்கு ஒரு குழந்தையின் பெயரை அறிவிக்கப் போகிறார்! இந்த அறிவிப்பு… Continue reading இதழ்: 2184 வார்த்தையானவர் மாம்சமான அதிசயம்!
