2 சாமுவேல் 12:14 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினாலே ..... நம்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வேத வார்த்தைகளில் ஒன்றுதான் இன்றைய வேதாகமப் பகுதி நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் தாவீதும் பத்சேபாளும் செய்த பாவத்தின் எதிர்விளைவைப் பற்றி பேசியது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தாவீது பத்சேபாளுடன் செய்த பாவத்தை அவனுக்கு உணர்த்திய நாத்தான், அந்தக் காரியம் கர்த்தருடைய சத்துருக்கள் அவரை தூஷிக்க காரணமாகி விட்டதை உணர்த்துகிறான். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின்… Continue reading இதழ்: 756 தூஷணம் வேண்டாம்! நறுமணம் வீசு!
Tag: தாவீது
இதழ்: 755 உன் பாவம் நீங்கச் செய்தார்!
2 சாமுவேல் 12:13 ..... நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். ஒரு குழைந்தைகள் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அறையிலிருந்து குழந்தைகள் ஓடி இன்னொரு அறைக்குள் நுழைந்தனர். அந்த கதவு உடனே மூடப்பட்டது. அது அவர்களை வேறொரு கால கட்டத்துக்கு அழைத்து சென்றது. அந்தக் குழந்தைகளால் அங்கிருந்து வெளியே வரவே முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எட்டியும் அந்தக் கதவு அவர்களுக்கு எட்டவேயில்லை! அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்ததால் ஒருவர்… Continue reading இதழ்: 755 உன் பாவம் நீங்கச் செய்தார்!
இதழ்: 754 தேவனுக்கு விரோதமான செயல்!
2 சாமுவேல் 12:13 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான். மறுபடியும் இந்த தியானத்தைத் தொடரக் கிருபை அளித்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! யூதாவையும் இஸ்ரவேலையும் வல்லமையோடு ஆண்ட தாவீது தன்னுடைய மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போது தான் தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனிடம் வந்து, அவனும் ஒரு சாதாரண மனிதன் தான், ஒரு பாவிதான் என்று நினைவூட்டினான்! தாவீதுக்கு தன்னுடைய நிலையை உணர ஒரு கணம் கூட ஆகவில்லை! நம்முடைய இருதயத்தில் கொளுந்து… Continue reading இதழ்: 754 தேவனுக்கு விரோதமான செயல்!
இதழ்: 753 என் எலும்புகளில் சவுக்கியமில்லை!
சங்கீதம் 38: 3,4 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று. அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் தாவீதின் வார்த்தைகள் எனக்கு பாவத்தை நாம் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கும்போது வரும் விளைவு எப்படியிருக்கும் என்று விளக்கிற்று! தகப்பனுடைய ஆடுகளை மேய்த்த மேய்ப்பனாகத் தன் வாழ்வைத் தொடங்கிய தாவீது, மந்தைவெளியில் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்த்த தாவீது, எங்கோ… Continue reading இதழ்: 753 என் எலும்புகளில் சவுக்கியமில்லை!
இதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை!
2 சாமுவேல் 12:12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார்... தாவீதின் அரண்மனைக்கு முன்னும், பின்னும், இருபுறமும் புருவங்கள் உயர்ந்தன! தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ் வாய்ந்தவன் மட்டும்… Continue reading இதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை!
இதழ்:751 நீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும்!
2 சாமுவேல் 12: 10,11 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால் , பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு… Continue reading இதழ்:751 நீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும்!
இதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்?
2 சாமுவேல் 12:9 கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? தாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான் எனக்கு ஆசை! ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால்,… Continue reading இதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்?
இதழ்: 749 இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்!
2 சாமுவேல் 12:7 ....இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னை சவுலின் கைக்கு தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன். இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் முன்னால் நின்று ஒரு ஐசுவரியவான் ஒரு ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்த கதையைக் கூறியது… Continue reading இதழ்: 749 இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்!
இதழ்: 748 நீ என்ன அவ்வளவு பெரியவனா?
2 சாமுவேல் 12:7 ....இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி..... நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெள்ள நீர் தலைமேல் போய் நாம் மூச்சுத்திணறுவது போன்ற காலம் வருவதுண்டு அல்லவா? அப்படிப்பட்ட நேரங்களில் நான் இரவில் வெளியெ வெறித்துப் பார்ப்பதுண்டு! நட்சத்திரக் கூட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை! அவைகளைப் பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவு அழகான வடிவமைப்பாளர் என்று யோசிப்பேன்! யோபு 38:31ல் ஆறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ… Continue reading இதழ்: 748 நீ என்ன அவ்வளவு பெரியவனா?
இதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை!
2 சாமுவேல்: 12:7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன் தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான்! இஸ்ரவேலை ஆளும்படி தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட ராஜா அவன்! அரண்மனைக்கு அன்று ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். இந்தமுறை அந்த விருந்தாளி ஒன்றும் தேநீர் குடிக்க வரவில்லை! தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர்! முதலில் அவர் ஏதோ ஒரு பணக்காரனால் திருடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் கதையோடு வந்த மாதிரி இருந்தாலும், சீக்கிரமே அவர் வந்த காரியத்தின் நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. தாவீது… Continue reading இதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை!
