எண்ணா: 21:4 “அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப் போகும்படிக்கு ஓர் என்னும் மலையை விட்டு சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்னினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.” என்னுடைய இளவயதில் தமிழ் மொழி கதைகள், நாவல்கள் அதிகமாக வாசிப்பேன். விசேஷமாக சரித்திர நாவல்களில் தான் ஆர்வம் அதிகம். அந்தக் கதைகளில் எதிரிகள் பட்டயத்தை மறைத்து செல்வதும், தக்க சமயம் வரும்போது பட்டயத்தை வெளியே எடுத்து உருவக்குத்துவதும் அடிக்கடி வாசிக்கிற ஒரு காரியம். இன்றைய தியானத்தில் நாம் பட்டயத்தைப் பற்றி… Continue reading மலர்1:இதழ்: 107 மனசோர்பு என்ற பட்டயம்!
Month: May 2011
மலர்:1இதழ்: 106 இச்சையை அடக்கு! இல்லாவிடில் அது உன்னை அடக்கும்!
எண்ணா:11:4 அவர்களுக்குள் இருந்த அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள். இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? என்றாவது ஏதாவது ஒன்றின் மேல் அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்ட ஞாபகம் இருக்கிறதா? நான் சிறு வயதில் ஐஸ்கிரீம் சாப்பிட அதிகமாக ஆசைப்படுவேன். அப்பொழுது வீடுகளில் பிரிட்ஜ் கிடையாது. வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மெரினா கடற்கரைக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அவ்வாறு ஒருமுறை நாங்கள் கடற்கரைக்கு போயிருந்தபோது அளவுக்கு மிஞ்சி ஐஸ்கிரீம் சப்பிட்டுவிட்டேன்.… Continue reading மலர்:1இதழ்: 106 இச்சையை அடக்கு! இல்லாவிடில் அது உன்னை அடக்கும்!
மலர்:1இதழ்: 105 சித்தீமில் நடந்தது என்ன?
எண்ணாகமம்:25:1 - 2 “ இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில்,ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே, வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள். ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள்.” வீட்டில் கேக் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்ஞள் கருவையும் ஏன் பிரிக்கிறோம் என்று நன்கு தெரியும்! வெள்ளைக்கரு கேக்கை மிருதுவாகப் பண்ணும் ஆனால் மஞ்சள் கருவோ கனமாக இருப்பதால், வெள்ளைக் கருவின் தன்மையையே… Continue reading மலர்:1இதழ்: 105 சித்தீமில் நடந்தது என்ன?
மலர்:1இதழ்: 104 இருதயத்தின் நினைவை வாய் பேசும்!
எண்ணா: 14:`2 “ இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி : எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும். இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.” நான் உயர்நிலைப்ப் பள்ளியில் படிக்கும்போது, ஒருவருடம் நான் என்னுடைய சொந்த ஊரில் படிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்கள். நான் இந்த சென்னையில் படித்தால் ஒரு நல்ல பெண்ணாகத் தேற மாட்டேன் என்ற எண்ணம் அம்மாவுக்கு. ஒருவருடமாவது சொந்த ஊர் வாசனை… Continue reading மலர்:1இதழ்: 104 இருதயத்தின் நினைவை வாய் பேசும்!
மலர்:1இதழ்: 103 இராட்சதருக்கு முன் வெட்டுக்கிளி!
எண்ணா:13:32 – 33 ” நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்.” நாங்கள் லக்னோவில் வாழ்ந்த போது குளிர் காலத்தில் பலநாட்கள் சூரியனைப் பார்க்கவே முடியாது. பகலில் கூட பனி இரங்கிக் கொண்டிருக்கும். நடுக்கும் குளிரும், ஈரப்பதமான குளிர்… Continue reading மலர்:1இதழ்: 103 இராட்சதருக்கு முன் வெட்டுக்கிளி!
மலர்:1இதழ்: 102 எண்ணிப்பார்! மறந்து போகாதே!
எண்ணா:15: 37 – 38 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி; நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்; நீங்கள் பின்பற்றி சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும், உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியெ செய்யும்படிக்கு அது உங்களுக்கு தொங்கலாய் இருக்கவேண்டும்.” நானும் என் கணவரும் அமெரிக்காவில், எங்களுடைய… Continue reading மலர்:1இதழ்: 102 எண்ணிப்பார்! மறந்து போகாதே!
மலர்:1இதழ்: 101 உன் தலை எண்ணப்பட்டிருக்கிறது!
எண்:1:1,2 “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டம் வருஷம், இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.” நாம் வேதத்தில் நான்காவது புத்தகமான எண்ணாகமம் என்ற புத்தகத்தை படிக்க இன்று ஆரம்பிக்கிறோம். அடுத்த ஒருசில வாரங்கள் நாம் இந்த எண்ணாகமத்தைப் படிக்கப் போகிறோம். இந்த புத்தகம் முழுவதும்,… Continue reading மலர்:1இதழ்: 101 உன் தலை எண்ணப்பட்டிருக்கிறது!
மலர்:1இதழ்: 100 ஆயத்தமா? நீ ஆயத்தமா?
லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள். அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.… Continue reading மலர்:1இதழ்: 100 ஆயத்தமா? நீ ஆயத்தமா?
மலர்:1இதழ்: 99 வாழ்வின் திசைகாட்டி
லேவி: 24: 11 -12 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள். நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும்… Continue reading மலர்:1இதழ்: 99 வாழ்வின் திசைகாட்டி
மலர்:1இதழ்: 98 பலூனை ஊசியால் குத்துவதைப் போல…….
லேவி: 24: 11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். நேற்று நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும் என்று அறிந்தோம். இன்று நாம் அவள் குமாரன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்ததைப் பற்றி பார்க்கலாம். இவனும் இஸ்ரவேலன் ஒருவனும் பாளயத்தில் சண்டை போட ஆரம்பித்தார்கள். அவன் மேல் இருந்த… Continue reading மலர்:1இதழ்: 98 பலூனை ஊசியால் குத்துவதைப் போல…….
