2 சாமுவேல்: 11:4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். இன்றைய வேதாகமப்பகுதியை வாசித்தபோது, சக்திவாய்ந்த பதவி மனிதரை ஊழல் செய்விக்காது. மனிதர் தான் சக்திவாய்ந்த பதவியை ஊழல் பண்ணுகிறார்கள் என்று யாரோ எழுதியது கவனத்துக்கு வந்தது. ஒருகாலத்தில் பக்கத்து வீட்டு நண்பராக இருந்தவர் கூட, பிசினஸ் ஆகட்டும் அல்லது அரசியல் ஆகட்டும் ஏதோ ஒரு இடத்தில் உயர்ந்த பதவியைப் பிடித்தவுடன் ஆளே மாறிப்போவதில்லையா? கிறிஸ்தவ ஊழியக்காரர் கூட சிலரைப் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் ஊழியத்துக்காக… Continue reading இதழ்: 713 பதவியும், பணமும் கொடுக்கும் தவறான கருத்து!
Month: July 2019
இதழ்: 712 உனக்கு சொந்தமில்லாததை பறித்துக் கொள்ளாதே
2 சாமுவேல் 11: 4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான். கவுதாரி என்ற பறவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எரேமியா தீர்க்கதரிசி இதைப்பற்றி 17 ம் அதிகாரத்தில் எழுதுகிறார். நானும் சற்று ஆர்வத்தோடு இதைப்பற்றி படித்தேன். மற்ற பறவைகளைப் போல இது மரங்கள் மேல் கூடு கட்டுவதில்லை. அது தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்கும். சில நேரங்களில் மற்ற பறவைகளின் கூடுகளில் தன் முட்டையை இடும். எது எப்படியோ சுலபமான வழியில் காரியத்தை சாதித்துக்… Continue reading இதழ்: 712 உனக்கு சொந்தமில்லாததை பறித்துக் கொள்ளாதே
இதழ்: 711 இஷ்டம்போல வாழும் வாழ்க்கை!
2 சாமுவேல் 11: ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள். உனக்கு இஷ்டப்படி நீ செய்யலாம் என்ற சுதந்தரம் என்னுடைய இளவயதில் கொடுக்கப்படவில்லை. அம்மா, அப்பா, டீச்சர்ஸ், போதகர்மார், என்ற பலருடைய அட்வைஸ் கேட்டுதான் நடந்தோம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தங்களுடைய சொந்த வழியில் நடந்தவர்கள் பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களால் அவர்களுடைய குடும்பம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது! எல்லா செயல்களுக்கும் பக்க விளைவுகள் உண்டு! அதுவும் யாரையும்பற்றி யோசிக்காமல்… Continue reading இதழ்: 711 இஷ்டம்போல வாழும் வாழ்க்கை!
இதழ்: 710 சோதனையை திறந்த வீட்டிற்குள் வரவழைப்பது போல!
2 சாமுவேல் 11:3 ... அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். ராஜாக்கள் யுத்தத்துக்கு போகும் காலத்தில் தாவீது தன்னுடைய வீட்டின் உப்பாரிகையின் மேல் உலாவிக்கொண்டிருந்தபோது ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டு, அவள் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான் என்று பார்த்தோம். அவன் அனுப்பிய ஆட்கள் அவளைப் பற்றிய தகவலுடன் திரும்பி வந்தனர். அவள் பெயர் பத்சேபாள் என்றும் அவள் திருமணமானவள் என்றும் அறிந்து கொண்டான் தாவீது. இந்த… Continue reading இதழ்: 710 சோதனையை திறந்த வீட்டிற்குள் வரவழைப்பது போல!
இதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல!
2 சாமுவேல் 11: அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். இரண்டு வருடங்களுக்கு முன்பு இமாலய மலையில் உள்ள தரம்சாலா என்ற மலை நகருக்கு சென்றிருந்தோம். அங்கே எங்கள் விமானம் இறங்கியவுடன் என்னுடைய செல் போனில் ஒரு மெசேஜ் வந்தது. அங்கு உள்ள நதிகளின் ஒரங்களில் நடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை அது. அங்கே நதிக் கரையோரம் சென்ற போதுதான் அந்த எச்சரிக்கையின் அர்த்தம் புரிந்தது. நதிகளின் ஓரங்களில் பெரிய பெரிய… Continue reading இதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல!
இதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை!
2 சாமுவேல் 11:3 அப்பொழுது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். ஒருநாள் தாவீது மதிய நேர ஓய்வுக்குப் பின், தன்னுடைய அரண்மனையின் உப்பாரிகையிலே உலாவிக் கொண்டிருந்தான். அருமையான காற்று! தான் அதிகமாக நேசித்த எருசலேம் நகரத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தாவீதை ஒன்றும் குறை சொல்வதற்கில்லை! அவனுக்கு சொந்தமான இடத்தில் அவன் உல்லாசமாய், அமைதியாய், காற்றோட்டமாய் நடந்தது ஒன்றும் தவறே இல்லை! எத்தனை வருடங்கள் காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், காலம் கழிக்க வேண்டியிருந்தது!… Continue reading இதழ்: 708 உனக்கு விரிக்கப்படும் வலை!
