நியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…” இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ்அப் போல, இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும் அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரே பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க முடிவு செய்தான். திம்னாத்தில்… Continue reading இதழ்: 1214 கலாட்டாவில் முடிந்த கல்யாணம்!
Month: July 2021
இதழ்:1213 உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்…
நியாதிபதிகள்: 14:3 அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி :அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். இன்று நாம் சிம்சோனைப் பற்றிப் படிப்பதைத் தொடருவோம். தேவனுடைய பணியாக பெலிஸ்தரின் ஊரான திம்னாத்துக்கு அனுப்பப்பட்ட சிம்சோன், அங்கு ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு அவள் தான்… Continue reading இதழ்:1213 உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்…
இதழ்: 1212 கண்களும் கவனமும் திசை திருப்பும் ஆசைகள்!
நியாதிபதிகள்: 14:2 (சிம்சோன்) திரும்ப வந்து தன் தாயையும் தகப்பனையும் நோக்கி; திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான். என்னுடைய வாழ்க்கையில் சிறு வயது முதல் இது வரைக்கும் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து , அதன்மேல் ஆசைப்பட்டு அதை எப்படியாவது அடையவேண்டும் என்று அடம் பிடித்து அழுத ஞாபகம் எனக்கு இல்லவே இல்லை. சிறு வயதிலிருந்தே இதை’செய்யாதிருப்பாயாக’ , அதை விரும்பாதிருப்பாயாக என்ற கட்டளைகளை எனக்கு நானே… Continue reading இதழ்: 1212 கண்களும் கவனமும் திசை திருப்பும் ஆசைகள்!
இதழ்:1211 கரை புரண்டு மாசு படும் நீரோடையைப் போல!
நியாதிபதிகள்: 14: 1 ” சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் துங்கபத்திரா ஆறு ஓடியது. கடல் போல பரந்திருந்த அந்த ஆற்றின் தண்ணீர் எப்பொழுதும் கண்ணாடி போலத் தெளிவாக இருக்கும். மும்பையில் மழை அதிகமாக இருந்தால் துங்கபத்திராவில் தண்ணீர் மிகவும் அதிகமாக வெள்ளப் பெருக்குடன் ஓடும். ஒருவருடம் ஆற்று நீர் கரைபுரண்டு ஊருக்குள்… Continue reading இதழ்:1211 கரை புரண்டு மாசு படும் நீரோடையைப் போல!
இதழ்: 1210 உன்னை அழைக்கும் சத்தம்!
நியாதிபதிகள்:13 : 25 “அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.” இன்றைய தியானத்தை வாசிக்கத் தொடருமுன்னர் ஒருநிமிடம் நாமும் இந்த தாணின் பாளயத்தில் வாழ்வதாக நினைத்துப் பார்ப்போம். அங்கு நம்மை சுற்றிலும் வாழும் பெலிஸ்தர் எப்பொழுதும் நம்முடைய சரீர வாழ்க்கையை மட்டும் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் தரைமட்டமாக்க காத்துக்கொண்டிருந்தால் நம்மால் சந்தோஷமாக ஒருநாளாவது வாழ முடியுமா? அப்படி நாம் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள்… Continue reading இதழ்: 1210 உன்னை அழைக்கும் சத்தம்!
இதழ்:1209 இருளை ஊடுருவி வரும் ஒளிக்கதிர்கள் !
நியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். நேற்று இரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. விடியற்காலை எங்கள் குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி மூன்று முறை அடித்தவுடன் எழும்பிவிட்டேன். ஜன்னல் வழியே வெளியே சற்று நேரம் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இருண்ட மேகத்தைக் கிழித்துக்கொண்டு சந்திரனின் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருன்தன. இருண்ட வானமும், ஊடுருவி வீசிய ஒளியும் என் தேவனாகிய… Continue reading இதழ்:1209 இருளை ஊடுருவி வரும் ஒளிக்கதிர்கள் !
இதழ்: 1208 உலகத்தால் அழியாத பங்கு!
நியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். இன்றைக்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சுகங்களை விட்டு செல்ல ஆசைப்படுகிறார்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி என் பிள்ளைகள் சுகமாக வாழ வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் கனவும். சொத்துப் பத்திரங்களையும், சுகபோக வாழ்க்கையையும், பொன் ஆபரணங்களையும், உலகப்பிரகாரமான ஞானத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும் நம்மில் பலர் ஆவிக்குரிய… Continue reading இதழ்: 1208 உலகத்தால் அழியாத பங்கு!
இதழ்:1207 கற்றுத் தாரும் ஆவியானவரே!
நியாதிபதிகள்: 13:8 “….பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். ஒருநாள் அமெரிச்காவில்உள்ள சிக்காகோ நகரில் வாழும் ஒரு இளம் பெண் என்னிடம் , அக்கா நீங்கள் வேலையும் செய்து கொண்டு, எப்படி உங்கள் இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து, கர்த்தருக்குள் வளர்த்து, இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கைத்துணையையும் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டாள். நான் அதற்கு பதிலாக தேவனுடைய தயவை நினைத்துப் புன்னகைக்கத்தான் முடிந்தது. இன்றும் என்னிடம் யாராவத் கேட்டால் பதிலுக்கு ஒரு… Continue reading இதழ்:1207 கற்றுத் தாரும் ஆவியானவரே!
இதழ்:1206 காத்திருந்து கற்றுக்கொள்ளும் நேரம்!
நியாதிபதிகள்: 13:8 ” அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி; ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்”. எங்கள் வீட்டில் என் கணவர் ஒரு கடிகாரம் போல. விடியற்காலத்தில் நான் வைத்த அலாரம் அடித்தவுடன் பக்கத்தில் தடவிப்பார்ப்பேன். வெறும் தலையணைதான் இருக்கும். அலாரம் அடிக்குமுன்னரே எழும்பி விடுவார்கள். நாங்கள் எங்காவது புறப்பட்டால் போதும், தான் அரை மணி… Continue reading இதழ்:1206 காத்திருந்து கற்றுக்கொள்ளும் நேரம்!
இதழ்:1205 கண்களால் கண்டால் தான் விசுவாசமா?
நியாதிபதிகள்: 13: 11 ” அப்பொழுது மனோவா எழுந்திருந்து , தன் மனைவியின் பின்னாலே போய் , அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார். ஆண்டவரே நீர் என்னை வழிநடத்துவது உண்மையானால் எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்! எங்கோ இந்த வாசகத்தை கேட்டமாதிரி இல்லையா? எத்தனைமுறை நீங்களும் நானும் இப்படியாக கர்த்தரை பரீட்சை பார்த்திருக்கிறோம். இதைப் படிக்கும்போது கர்த்தரை பரீட்சை பார்த்த ஒருவனுடைய கதை மனதில்… Continue reading இதழ்:1205 கண்களால் கண்டால் தான் விசுவாசமா?
