2 சாமுவேல் 12:12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார்... தாவீதின் அரண்மனைக்கு முன்னும், பின்னும், இருபுறமும் வாழ்ந்த மக்களின் புருவங்கள் உயர்ந்தன! தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ்… Continue reading இதழ்:1466 நான்கு சுவருக்குள் நடப்பவை வெளியே தெரியாது அல்லவா?
Month: July 2022
இதழ்:1465 தவறாக விதைத்தால் எதை அறுப்போம்?
2 சாமுவேல் 12: 10,11 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால் , பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு… Continue reading இதழ்:1465 தவறாக விதைத்தால் எதை அறுப்போம்?
இதழ்:1464 ஏன் என்னை இவ்வாறு இழிவு படுத்துகிறாய்?
2 சாமுவேல் 12:9 கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? தாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான் எனக்கு ஆசை! ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால்,… Continue reading இதழ்:1464 ஏன் என்னை இவ்வாறு இழிவு படுத்துகிறாய்?
இதழ்: 1463 இது போதாதா? இன்னும் கேட்டு பெற்றுக் கொள்!
2 சாமுவேல் 12:7 ....இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னை சவுலின் கைக்கு தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன். இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் முன்னால் நின்று ஒரு ஐசுவரியவான் ஒரு ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்த கதையைக் கூறியது… Continue reading இதழ்: 1463 இது போதாதா? இன்னும் கேட்டு பெற்றுக் கொள்!
இதழ்:1462 உன்னை இம்மட்டும் உயர்த்தியவர் அவரல்லவா?
2 சாமுவேல் 12:7 ....இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி..... நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வெள்ளம் தலைமேல் போய் நாம் மூச்சுத்திணறுவது போன்ற காலம் வருவதுண்டு அல்லவா? அப்படிப்பட்ட நேரங்களில் நான் இரவில் வெளியெ வெறித்துப் பார்ப்பதுண்டு! நட்சத்திரக் கூட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை! அவைகளைப் பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவு அழகான வடிவமைப்பாளர் என்று யோசிப்பேன்! யோபு 38:31ல் ஆறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக்கூடுமோ?… Continue reading இதழ்:1462 உன்னை இம்மட்டும் உயர்த்தியவர் அவரல்லவா?
இதழ்: 1461 இன்று அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில்….
2 சாமுவேல்: 12:7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன் தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறான்! இஸ்ரவேலை ஆளும்படி தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட ராஜா அவன்! அரண்மனைக்கு அன்று ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். இந்தமுறை அந்த விருந்தாளி ஒன்றும் தேநீர் குடிக்க வரவில்லை! தேவனுடைய செய்தியோடு வந்திருக்கிறார் அவர்! முதலில் அவர் ஏதோ ஒரு பணக்காரனால் திருடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் கதையோடு வந்த மாதிரி இருந்தாலும், சீக்கிரமே அவர் வந்த காரியத்தின் நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. தாவீது… Continue reading இதழ்: 1461 இன்று அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில்….
இதழ்:1460 நமக்குள்ளே விதைக்கப்படும் ஒரு அற்புத குணம்!
2 சாமுவேல் 12:6 அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். நாத்தான் கூறிய கதையின் மூலம் ஐசுவரியவான் ஒருவன் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்ததை அறிந்தவுடன் தாவீது அவன் மீது மிகவும் கோபப்பட்டு ,அவன் மரண தண்டனை பெற வேண்டும் என்று கூறியதை பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்பதைப் பார்க்கிறோம். இதைப்படிக்கும்போது லூக்கா 19 ல் நாம் வாசிக்கும் சகேயு… Continue reading இதழ்:1460 நமக்குள்ளே விதைக்கப்படும் ஒரு அற்புத குணம்!
இதழ்: 1459 அவர் நல்லவர்! அவர் கிருபை என்றுமுள்ளது!
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். இன்றைய வேதாகமப் பகுதி தாவீதுக்கு பயங்கர கோபம்மூண்டதாகக் கூறுகிறது! தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட் வேண்டும் என்று நினைத்தான் தாவீது. அதையும் தாண்டி கோபத்தின்… Continue reading இதழ்: 1459 அவர் நல்லவர்! அவர் கிருபை என்றுமுள்ளது!
இதழ்:1458 நம் கண்ணில் உள்ள தூசி நம் கண்ணில் படுகிறதா?
2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி.... நீ யாருடைய தவறையாவது சீர் திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ( மத்:7:1) என்று கர்த்தராகிய இயேசு சொன்னார். மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாக கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான் நம் கண்களில் படவே படாது. அப்படித்தான் தாவீதுக்கும் ஆகிவிட்டது.… Continue reading இதழ்:1458 நம் கண்ணில் உள்ள தூசி நம் கண்ணில் படுகிறதா?
இதழ்:1457 பிறருக்கு கொடுப்பதில் பின்வாங்காதே!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த வருடத்தின் ஆறு மாதங்களை கரம் பிடித்து நடத்திய தேவன், தொடர்ந்து நம்மை பாதுகாத்து நடத்துமாறு அவருடைய கரங்களில் நம்மை அர்ப்பணிப்போம். நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை… Continue reading இதழ்:1457 பிறருக்கு கொடுப்பதில் பின்வாங்காதே!
