1 சாமுவேல் 25:25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது. அபிகாயில் தன்னை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு யாரையும் குற்றம் சுமத்தாமல், பழியைத் தானே ஏற்றுக்கொண்டு, சாந்தமான வார்த்தைகளால் தாவீதிடம் பேசினாள் என்று பார்த்தோம். அவள் பேச ஆரம்பித்தவுடனே அவள் எவ்வளவு பேசினாள் என்பதை படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக… Continue reading இதழ் 641 நீ யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?
இதழ்: 640 பொன்னைவிட மின்னிய சாந்தம்!
1 சாமுவேல் 25: 24 ........உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும். நாபாலைத் திருமணம் செய்த குற்றம் அல்லாமல் வேறு குற்றம் அறியாத ஒரு பெண்தான் நம்முடைய அபிகாயில். இந்த அழகியப் பெண்ணின் குணநலன்களைத் தான் நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அவளுடைய புத்திசாலித்தனம், கவனித்து செயல் படும் குணம், நேரத்தை வீணாக்கமல் செயல் படும் தன்மை, தாழ்மையான குணம் என்று பல நற்குணங்களை பார்த்துவிட்டோம். அலைபாயும் நீருக்கு அணை கட்டுவதுபோல,… Continue reading இதழ்: 640 பொன்னைவிட மின்னிய சாந்தம்!
இதழ்: 639 பாவம் ஒரு பக்கம்! பழி ஒரு பக்கம்!
1 சாமுவேல் 25:24 அவன் பாதத்திலே விழுந்து; என் ஆண்டவனே இந்தப் பாதகம் என் மேல் சுமரட்டும். மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது என்பது என்னால் என்றுமே முடியாத ஒன்று. நான் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழியை சுமத்தவும் மாட்டேன். இன்றைய வேதாகம வசனம் நிச்சயமாக என் மனதை நெகிழ வைத்தது. அவள் தாவீதண்டை சென்று தன் கணவனாகிய நாபால் செய்த அட்டூழியத்துக்கு பழியைத் தானாக முன்வந்து தன்மேல் ஏற்றுக் கொண்ட ஒரு தைரியமானப்… Continue reading இதழ்: 639 பாவம் ஒரு பக்கம்! பழி ஒரு பக்கம்!
இதழ்: 638 தாழ்மையே மேன்மையின் அடையாளம்!
1 சாமுவேல் 25: 23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து தாவீதும் அவனோடிருந்த 400 பேரும் தங்களுடைய உதவியை உதாசீனப்படுத்தின நாபாலுக்கு தங்களுடைய வீரத்தைக் காண்பிக்க பட்டயத்தை ஏந்தி கோபத்துடன் விரைந்தனர். அவர்களுடைய முகத்தில் கொலைவெறி காணப்பட்டது. நாபாலும் தாவீதும் சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை ஆனால் அதற்குள் தாவீது சென்ற வழியில் அபிகாயில் என்ற ஒரு ஒளி அவனை சந்திக்கிறது.… Continue reading இதழ்: 638 தாழ்மையே மேன்மையின் அடையாளம்!
இதழ்: 637 பகையை மாற்றிய அன்பின் விருந்து!
1 சாமுவேல்: 25:18 அபொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி அபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள்… Continue reading இதழ்: 637 பகையை மாற்றிய அன்பின் விருந்து!
இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!
1 சாமுவேல் 25: 15 -17 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும். ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர்… Continue reading இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!
இதழ்: 635 முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர்!
1 சாமுவேல் 25: 14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்திரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான். அவர்கள்பேரில் அவர் சீறினார். ராஜாவின் மலர்களில் நான் அபிகாயிலைப்பற்றி சில நாட்கள் எழுதலாம் என்றிருக்கிறேன். தயவுசெய்து என்னோடுகூட மிகப்பழமையான காலத்துக்கு, அபிகாயிலும் நாபாலும் வாழ்ந்த கர்மேலுக்கு பிரயாணம் பண்ண ஆயத்தமாயிருங்கள்! அபிகாயிலைப்பற்றி அநேகர் எழுதியிருக்கிறதைப் படித்து விட்டேன். பலர் அபிகாயிலை ஒரு சந்தர்ப்பவாதியாகப் பார்க்கிறார்கள். சிலர் அவளை ஒரு… Continue reading இதழ்: 635 முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர்!
இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!
1 சாமுவேல் 25: 10-13 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தமாக, தாவிது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?.... நான் என் அப்பத்தையும், தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியேத் திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப்பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்… Continue reading இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!
இதழ்: 633 நன்றியற்ற நாபால்!
1 சாமுவேல் 25: 5-8 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப்போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச் சொல்லி, .... இப்பொழுது ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள். அவர்கள் கர்மேலிலிருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை. அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. உம்முடைய வேலைக்காரரைக் கேளும் அவர்கள் உமக்குச் சொல்வார்கள். வேதம் இன்றைய வேதாகமப் பகுதியில் தெளிவாக ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறது. கர்மேலில் ஆடுகளுக்கு மயிர்க்கத்தரிக்கும் நேரம்… Continue reading இதழ்: 633 நன்றியற்ற நாபால்!
இதழ்: 632 நாபால் என்னும் முட்டாள்!
1 சாமுவேல்: 25 2-3 மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான். அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது. அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது..... அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர். வேதத்தை வாசிக்க வாசிக்கத்தான் நாம் அது எத்தனை அருமையான பொக்கிஷம் என்பதை உணர முடியும்! அது இந்த வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது நான் மிகவும் உணர்ந்தேன். இதை ஒவ்வொருநாளும் நாம் வாசிப்போமானால் எத்தனையோ பொல்லாங்குகளிலிருந்து… Continue reading இதழ்: 632 நாபால் என்னும் முட்டாள்!
