2 சாமுவேல் 13:13 .... இப்போதும் நீ ராஜாவோடே பேசு. அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள். வேதத்தைப் படிக்கும் ஒவ்வொருநாளும் அதில் நான் கண்டெடுக்கும் முத்துக்கள் என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது என்று நான் மறுபடியும் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று தெரியாது! இன்றைய வேதாகமப்பகுதி நான் அடிக்கடி நினைக்கும் 'இதை நான் படித்ததே இல்லையே' என்று நினைத்த பகுதிகளில் ஒன்று! ஒருவேளை இந்தப்பகுதி உங்களுக்கும் இன்று புதிதாகத் தெரியலாம்! நேற்று நாம் அம்னோன்… Continue reading இதழ்: 772 அப்பா என்னும் அற்புத உறவு!
Month: October 2019
இதழ்: 771 வெட்கம்! அவமானம்! பயம்!
2 சாமுவேல் 13: 11 - 13 அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில் அவன் அவளைப்பிடித்து அவளைப்பார்த்து: என் சகோதரியே நீ வந்து என்னோடே சயனி என்றான். அதற்கு அவள் வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத் தகாது. இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதி கெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய். அன்று அழகிய ஏதேன் தோட்டத்தில் பகலிலே குளிர்ச்சியான… Continue reading இதழ்: 771 வெட்கம்! அவமானம்! பயம்!
இதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா?
2 சாமுவேல் 13: 6 - 7 அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப்போல் படுத்துக்கொண்டு ராஜா தன்னைப்பார்க்க வந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படிக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுபி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொன்னான். தேவனுடைய கட்டளையை மீறி பல… Continue reading இதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா?
இதழ்: 769 மசாலா சேர்ந்த மாபெரும் நடிப்பு!
2 சாமுவேல் 13:5 அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள். உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம் கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவு செய்யவேண்டும் என்று சொல் என்றான். இந்த உலகத்தின் எல்லா மூலைகளிலும் உண்மை காணாமல் போய் விட்டது என்பதை நாம் ஒவ்வொருநாளும் டிவியில் பார்க்கும் செய்திகள் காட்டுகின்றன அல்லவா? அப்பா!… Continue reading இதழ்: 769 மசாலா சேர்ந்த மாபெரும் நடிப்பு!
இதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்!
2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா?என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன்என்றான். நாம் தொடர்ந்து படிக்கும் அம்னோன் தாமார் என்ற இருவரின் வாழ்க்கையில் இன்று தாவீதின் குமாரனாகிய அம்னோனின் வாயிலிருந்து புறப்பட்ட சுவாரஸ்யமான வார்த்தைகளைப் பார்க்கிறோம். அவனது நண்பனும் உறவினனுமான யோனதாப் வற்புறுத்தி கேட்டதால் அம்னோன் தன்னுடைய நோய்க்கு காரணம் தான் இதுவரை… Continue reading இதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்!
இதழ் 767 பெருமை தேவனுக்கே விரோதமானது!
2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா?என்றான். அம்னோனின் உள்ளம் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் காதல் கொண்டது. அது தேவனால் தடைபட்ட உறவு என்று அறிந்தும் அதை இச்சித்தான். அந்த இச்சையை அடைய அவனுடைய உறவினனும் நண்பனுமாகிய யோனதாப் அவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பன் யோனதாபை வேதம் மகா தந்திரவாதி என்று கூறியதையும் பார்த்தோம். இன்று யோனதாப் தந்திரமாய்… Continue reading இதழ் 767 பெருமை தேவனுக்கே விரோதமானது!
இதழ் 766 நட்பு வாழ்க்கையையே மாற்றும்!
2 சாமுவேல் 13:3 அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி. நாம் இன்னும் ஒரு சில நாட்கள் படிக்கப்போகும் இந்த சம்பவம் தாமார் அவளுடைய சகோதரனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம். இது வேதத்தை சற்று படித்த எல்லோருமே அறிந்த ஒரு சம்பவம் தான். இந்த சம்பவம் தாவீதின் பிள்ளைகள் அத்தனைபேரையும் இதில் சம்பந்தப்படுத்தியது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இதை ஆழமாக படிக்கும்போதுதான் இந்த… Continue reading இதழ் 766 நட்பு வாழ்க்கையையே மாற்றும்!
இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!
2 சாமுவேல் 13:1,2 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. ஒரு பாடகன், இசைக்கருவி வாசிக்கும் கலைஞன், ஒரு மகா பெரிய யுத்த வீரன். மற்றும் காதலில் மன்னன் கூட! அவன் மனது விரும்பும் யாரையும் அடையத் தவற மாட்டான் - அரண்மனை நிறைந்திருந்த அவனுடைய… Continue reading இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!
இதழ் 764 ஒரு மா பெரும் அதிசயம்!
யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் அன்புகூர்ந்தார். தாவீதையும் பத்சேபாளையும் குறித்து அநேக வாரங்கள் படித்து விட்டோம். தாவீதின் வாழ்க்ககையைத் தொடருமுன் ஒரு சிறிய இடைவேளை எடுக்கலாம் என்று நினைத்தேன். இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களுக்குள் வந்திருக்கிறோம்.கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாட்கள் அதிக தூரம் இல்லை. தேவன் நம்மேல் கூர்ந்த மாபெரும் அன்பைக் கொண்டாடும் நாட்கள் அவை. நாம்… Continue reading இதழ் 764 ஒரு மா பெரும் அதிசயம்!
இதழ்: 763 வேறொருவரும் அறியாத உன் பெயர்!
2 சாமுவேல் 12: 24 - 25 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டாள். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான். எத்தனை முறை நாம் காலையில் ஒரு வசனத்தைப் படிக்கும்போது, இன்று இது எனக்காகவே எழுதப்பட்டது என்று நினைக்கிறோம்! நாம் இவ்வளவு நாட்கள் நாம் படித்த தாவீதின் வாழ்க்கை நம்மில் பலரோடு பேசியிருக்கும் என்று நம்புகிறேன். தாவீது தன்னுடைய… Continue reading இதழ்: 763 வேறொருவரும் அறியாத உன் பெயர்!
