கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 798 நம்மோடு பிறந்த ஒரே சொந்தம்!

சங்: 51:5  இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

தேவனாகிய கர்த்தர்  ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஆறாவது நாளாக இந்தத் தலைப்பை தியானிக்கிறோம்.

பல வருடங்களுக்கு முன்னால் ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தாகக் கருதப்படும் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இது பச்சையான சதுப்பு நிலமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக இந்த இடம் மிகவும் நீர் வளமோடு ஈரமாக இருந்தது. உலகத்தின் இந்த பாகத்தில் காய்ந்த பாலைவனங்கள் அதிகமான ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஆதியாகமம் 2 வது அதிகாரத்தில் நமக்கு வார்த்தையாகவே அந்தத் தோட்டத்தைப் பற்றிய அழகிய வர்ணிப்பு கிடைக்கிறது. அந்த தோட்டத்தின் அழகுக்கு இவர்கள் காட்டும் எந்த இடமும் நிகையாகாது என்று தோன்றியது.

அந்த அழகியத் தோட்டத்தை ஒருமுறை நம் கண்களால் கண்டால் எப்படியிருக்கும் என்று நினைப்பதுண்டு! பரிபூரண அழகு பூமியில் காணப்பட்டது ஏதேன் தோட்டத்தில் தான்!

ஆதியாகமம் 3 ம் அதிகாரத்தில், அந்த அழகிய தோட்டத்தைப் பற்றி நாம் படித்த பின் ஒரே அதிகாரத்தில் ஆதாம், ஏவாளை,சர்ப்பம் என்னும் சாத்தான் தன்னுடைய பொய்யால் மேற்கொண்டபின், இன்று வரை அந்த சர்ப்பத்தின் பொய்களை மனிதர் நம்பியே வருகிறார்கள்.

இன்று நம்முடைய வேதாகமப் பகுதிக்கு செல்வோம். இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன் என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள், என்று தாவீது சொல்கிறான். நான் என்னுடைய துர்க்குணமுள்ள தாயின் வயிற்றிலிருந்து துர்க்குணமுள்ள உலகத்துக்குள் வந்தேன் என்றுதானே பொருள்! தாவீது தான் பாவமுள்ள தாயின் மூலம், பாவமுள்ள உலகத்துக்குள் வந்தாலும் தனக்கென்று ஒரு இரட்சகர் உள்ளார் என்று அறிந்திருந்தான்!  கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

கர்த்தராகிய இயேசு இந்த உலகத்துக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்னமே தாவீதுக்கு இரட்சகரைப் பற்றித் தெரியும் ஏனெனில் அவன் பரம பிதாவாகிய தேவனை அறிந்திருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தான்.

2 சாமுவேல் 22:2, 3  கர்த்தர் என் கன்மலையும்,என் கோட்டையும்,என் ரட்சகருமானவர் என்று தாவீது எழதுகிறான்.

அதுமட்டுமல்ல! தேவன் நான் நம்பியிருக்கிற துருகமும்…. என் புகலிடமும், என் ரட்சகருமானவர் என்கிறான்.

தேவனாகிய கர்த்தர் தாவீதை இவ்வளவாக நேசித்ததில் சந்தேகமே இல்லை! ஏனெனில் தாவீது தன்னுடைய வாழ்வில் இச்சையடக்கம் இல்லாமல், கொலை போன்ற பெரிய பாதகங்களை செய்த போதும், அவன் தன்னை பாவத்திலிருந்து இரட்சிக்க தேவனாகிய கர்த்தர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று அறிந்து அவரை நாடினான்.

இன்று அதே தேவன் நம்மையும் நேசிக்கிறார். நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்கவே தன்னுடைய ஒரே குமாரனை நமக்காக தந்தருளினார்! அவரை நீ அறிவாயா?

நமக்கு சொந்தம் என்று இந்த உலகில் நம்மோடு தோன்றியது பாவம் ஒன்றுதான்! நம்முடைய சரீரத்தில் எந்த நன்மையையும் நாம் சுமக்கவில்லை!  

தாவீதைப்போல கர்த்தரை நோக்கி ஆண்டவரே நீரே என் ரட்சகர் என்று விசுவாசத்தோடு நாம் சொல்ல முடியுமா! கர்த்தர் உன்னையும் தாவீதை நேசித்ததுபோல நேசிப்பார்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

Leave a comment