1 இராஜாக்கள் 17:7 - 9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். எலியா கேரீத் ஆற்றண்டையில் குடிவந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று. என்னுடைய கட்டிலும் மெத்தையும் இல்லாமல் நான் தூங்கவே மாட்டேன் என்று நீயும் நானும் நமக்குள் சொல்லிக்… Continue reading இதழ்:1615 வறண்ட ஆற்றண்டையில் கர்த்தரின் சத்தம்!
Month: February 2023
இதழ்: 1614 கேரீத் அனுபவம் – ஆறு வற்றிப் போயிற்று!
1 இராஜாக்கள் 17:7 தேசத்தில் மழை பெய்யாதபடியினால் சிலநாளுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று. யாத்திராகமம் 14:13 ... பயப்படாதிருங்கள். நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். தேவனுடைய மனுஷனான எலியா ஒரு வருடமாக கேரீத் ஆற்றங்கரையை தன் தங்குமிடமாகக் கொண்டிருக்கிறான். அவனுடைய தாகத்தை ஒவ்வொருநாளும் தீர்த்து வந்த ஆறு இப்பொழுது தண்ணீரற்று வரண்டு போயிற்று. உன்னுடைய பெயர் எலியாவென்றால் இந்த சூழலில் நீ என்ன நினைத்திருப்பாய்? இதையெல்லாம் முன்னரே… Continue reading இதழ்: 1614 கேரீத் அனுபவம் – ஆறு வற்றிப் போயிற்று!
இதழ்:1613 கேரீத் அனுபவம் – காத்திருத்தல் வீணாகி விடுமா?
1 இராஜாக்கள் 17:5 அவன் போய் கஎத்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காத்திருப்பது யாருக்குமே பிடிக்காத காரியம் என்று நினைக்கிறேன்! எதற்காகவாவது அல்லது யாருக்காவது அதிக நேரம் காத்திருந்து விட்டால், எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டோம் என்று நான் நினைப்பதுண்டு. சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தபோது திடீரென்று முன்னால் செல்ல முடியாதபடி வாகனங்கள் நிறுத்தப்பட்டன! இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தோம். என்னக் காரணம் என்றேத்… Continue reading இதழ்:1613 கேரீத் அனுபவம் – காத்திருத்தல் வீணாகி விடுமா?
இதழ்: 1612 கேரீத் அனுபவம் – ஒவ்வொரு நாளுக்கும் போதுமான உணவே!
1 இராஜாக்கள் 17:6 காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன் இன்று நாம் இந்த வசனத்தைத் தான் படிக்கப்போகிறோம் என்று நினைப்பீர்கள். ஆனால் நான் இன்று 2 இராஜாக்கள் 25:30 ல் காணப்படும், வேதத்தில் அடிக்கடி நினைவுபடுத்தப்பட்ட ஒன்றைதான் எழுதப்போகிறேன். 2 இராஜாக்கள் 25:30 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, அனுதினமும்… Continue reading இதழ்: 1612 கேரீத் அனுபவம் – ஒவ்வொரு நாளுக்கும் போதுமான உணவே!
இதழ்:1611 கேரீத் அனுபவம் – தக்க சமயத்தில் உணவு சேவை!
1 இராஜாக்கள் : 17: 4 - 6 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய்க் கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். நாங்கள் ஒருவருடத்திற்கு முன்பு வரை சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அங்கு விடியற்காலை 5 மணிக்கே நாங்கள் இருவரும் நடப்பதற்காக வெளியே செல்லுவோம். விடியற்காலையில்… Continue reading இதழ்:1611 கேரீத் அனுபவம் – தக்க சமயத்தில் உணவு சேவை!
இதழ்:1610 கேரீத் அனுபவம் – என்னை எங்கே அனுப்புகிறீர்?
1 இராஜாக்கள் 17:2-3 பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப்போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு. கீலேயாத்தின் குடிகளிலிருந்து எலியா கர்த்தரால் அழைக்கப்பட்டு, இஸ்ரவேலில் பாகால் வழிபடுதலை மையமாகக் கொண்டிருந்த சமாரியாவுக்கு கர்த்தரால் அனுப்பப்பட்டான் என்று பார்த்தோம். கர்த்தர் தனக்குக் கொடுத்த பணியை அவன் ஆகாபின் அரண்மனையில் செய்து முடித்தவுடன் கர்த்தர் அவனுக்கு இன்னொரு செய்தியை கொடுக்கிறார். அவர் இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப்போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்… Continue reading இதழ்:1610 கேரீத் அனுபவம் – என்னை எங்கே அனுப்புகிறீர்?
இதழ்:1609 உண்மையான ஜெபம்! உண்மையான பெலன்!
1 இராஜாக்கள் 17:1 கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி; என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அக்கிரமம் நிறைந்த ஆகாபின் முன்னால் எலியா ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தினால் வந்து நின்றான் என்று பார்த்தோம். தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து வந்த பலருக்கு, யெரொபெயாமிலிருந்து ஆரம்பித்த அந்த நீடிய 40 வருட காலகட்டம் தேவனால் மறக்கப்பட்ட காலம் போலத்… Continue reading இதழ்:1609 உண்மையான ஜெபம்! உண்மையான பெலன்!
இதழ்:1608 தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
1 இராஜாக்கள் 17:1 கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி....... இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். கடந்த சில வாரங்களாக நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எலியா வாழ்ந்த காலத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது! ஒருவேளை நான் ஆகாப் ஆளுகை செய்து கொண்டிருந்த வேளை அங்கே பெத்தேலில் வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன் என்றால் தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்… Continue reading இதழ்:1608 தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இதழ்:1607 எங்கோயிருந்து வந்த யாரோ ஒருவன்!
1 இராஜாக்கள்: 17:1 கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி இந்த வருடத்தின் இரண்டாவது மாதத்தைக் காணச் செய்த கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரிப்போம். இந்த மாதம் முழுவதும் தேவனுடைய கரம் நம்மைப் பாதுகாத்து வழிநடத்துமாறு நம்மைத் தாழ்மைப்படுத்தி ஜெபிப்போம். என்னுடைய நண்பர்களில் பலருக்கு நல்ல குடும்பப் பின்னணி உண்டு! அவர்களுடைய சொந்தங்கள் எல்லா ஊரிலேயும் இருப்பார்கள். ஆனால் என்னுடைய பெற்றோரைப் பற்றி நினைக்கும்போது , அவர்கள் பிறந்த குக்கிராமங்களைப் பற்றி யோசிக்கும்போது, இந்த உலகத்தில் நான்… Continue reading இதழ்:1607 எங்கோயிருந்து வந்த யாரோ ஒருவன்!
