நியா: 4: 24 "இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது." இன்று காலை ஒரு கப் தேநீரை சூடுபண்ணி வைத்துவிட்டு , சற்று நேரம் ராஜாவின் மலர்களுக்காக டைப் செய்து கொண்டிருந்தேன். அருகில் வைத்த தேநீரை மறந்து விட்டேன். திடீரென்று ஞாபகம் வர, தேநீர் கப்பை எடுத்து வாயில் வைத்தேன்! அது வெதுவெதுப்பாகி ருசியற்று இருந்தது. "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது… Continue reading மலர் 7 இதழ்: 466 வெதுவெதுப்பான வெந்நீராய் இருக்காதே!
Month: August 2016
மலர் 7 இதழ்: 465 திருப்பணியின் இயக்குனர்!
நியா: 4 : 23 "இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்." நாம் நம்முடைய தியானத்தில் தேவனாகிய கர்த்தர், தெபோராள், பாராக், யாகேல் என்ற மூன்று வித்தியாசமான மனிதர்களை, தம்முடைய சித்தத்தை பூமியிலே நிறைவேற்ற உபயோகப்படுத்தினார் என்று பார்த்தோம். ஒரு நிமிடம் கவனியுங்கள்! இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது! கர்த்தருக்கு தெபோராள், பாராக், யாகேல் என்றவர்களின் ஊழியம் தேவைப்பட்டது, அவர்களுடைய வரங்கள் அவர் சேவைக்குத்… Continue reading மலர் 7 இதழ்: 465 திருப்பணியின் இயக்குனர்!
மலர் 7 இதழ்: 464 தேவன் நியமிக்கும் அணி!
நியா: 4: 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான், அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டு போய் வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள். அவன் அவளிடத்திற்கு வந்த போது, இதோ சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது. இந்த மலர்த்தோட்டத்தில் உங்களோடு சேர்ந்து வேதத்தை ஆராய ஆரம்பித்தபின்னர், உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தான் கர்த்தர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் உபயோகப்படுத்துகிறார் என்ற அதிசயம் எனக்கு தெளிவாக… Continue reading மலர் 7 இதழ்: 464 தேவன் நியமிக்கும் அணி!
மலர் 7 இதழ்: 463 சிசெராவை இளைப்பாற விடாதே!
நியா: 4:21 "பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்" ஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் பைக் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து… Continue reading மலர் 7 இதழ்: 463 சிசெராவை இளைப்பாற விடாதே!
மலர் 7 இதழ்: 462 சிசெரா என்னும் தந்திரவாதி!
நியா: 4 : 20 அப்பொழுது அவன் : நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான். நாம் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவைப் பற்றிப் பார்த்தோம்! அந்த கூடாரத்துக்குள் நடந்ததை சற்று கூர்ந்து கவனிப்போம்! சிசெரா, யாகேலின் கணவன் ஏபேர் இல்லாதபோது உள்ளே புகுந்தான். யாகேல் கொடுத்த பாலைப் பருகினான். இப்பொழுது யாகேல் கொடுத்த சமுக்காளத்தை மூடிக்கொண்டு தூங்கப் போகிறான். அதற்காக… Continue reading மலர் 7 இதழ்: 462 சிசெரா என்னும் தந்திரவாதி!
மலர் 7 இதழ்: 461 சிசெராவுக்கு இடம் இல்லை!
நியா: 4:19 " அவன் அவளைப் பார்த்து : குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியை திறந்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள். ஒருநாள் மதியம் நான் சாப்பிட உட்கார்ந்த போது எனக்கு உடம்பில் சர்க்கரை குறைந்து விட்டது. நான் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தேன், ஆனால் அதி வேகமாக சர்க்கரை குறைந்து கைகளும் கால்களும் நடுங்கவும், கண்கள் சொருகவும் ஆரம்பித்தன, வாய் குழறியது. என் மருமகள் ஆரஞ்சு… Continue reading மலர் 7 இதழ்: 461 சிசெராவுக்கு இடம் இல்லை!
மலர் 7 இதழ்: 460 முரட்டு ஆடுதான் ஆனால் முட்டாள் அல்ல!
நியா: 4: 18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டு போய்; உள்ளே வாரும்: என் ஆண்டவனே,என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; யாகேல் என்னும் பெயருக்கு வரையாடு என்று அர்த்தம் என்று பார்த்தோம். அவள் ஒரு நாடோடிப் பின்னணியில் வளர்ந்திருக்கக் கூடும் என்றும் பார்த்தோம். யாகேல் முரட்டுப் பெண்ணாக வளர்ந்திருக்கலாம் ஆனால் முட்டாள் பெண்ணாக அல்ல! புத்திசாலி என்று எண்ணப்படுகிற எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவனையும், பிள்ளைகளையும் கூர்ந்து கவனிப்பாள். கணவனுடைய நட்பும், பிள்ளைகளுடைய… Continue reading மலர் 7 இதழ்: 460 முரட்டு ஆடுதான் ஆனால் முட்டாள் அல்ல!
மலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு !
நியா: 4: 18 "யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர் கொண்டு போய்...." நாம் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகள் எப்படி, யாரைப்போல வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டே பெயர்களை தெரிந்தெடுக்கிறோம். இன்றைக்கு நாம் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீன் என்கிற ராஜாவின் சேனாதிபதி சிசெராவை அழித்து சரித்திரத்தில் இடம் பெற்ற யாகேல் என்ற பெண்ணைப் பற்றிப் படிக்கப் போகிறோம்! யாகேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? வரையாடு! வரையாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? சில வருடங்களுக்கு முன்னால் இந்த… Continue reading மலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு !
God can change your impossibilities today!
This evening I was reading I Samuel 23, where David was told by God that he was the chosen leader of Israel. But very much like Moses who waited eighty years to really be in the place God needed him, it took God some time to get David from the pasture into the palace. Patience… Continue reading God can change your impossibilities today!
மலர் 7 இதழ்: 458 நட்புடன் நுழைந்தான் சிசெரா!
நியா: 4: 17 "சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது." வெற்றி! வெற்றி! சிசெராவின் சேனை ஒழிந்தது! கர்த்தர் நமக்கு வெற்றி கொடுத்தார்! சிசெராவும் அவனுடைய 900 இரும்பு ரதங்களும் ஒழிந்தன! இஸ்ரவேல் மக்களுக்குள் இவ்வாறு வெற்றி செய்தி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருந்த வேளையில், " தலைப்புச் செய்திகள்... சிசெரா ஒழிந்து போகவில்லை! தப்பித்து விட்டான்!"… Continue reading மலர் 7 இதழ்: 458 நட்புடன் நுழைந்தான் சிசெரா!
