1 சாமுவேல் 15: 13,14 சாமுவேல் சவுலினிடத்தில் போனான்.சவுல் அவனை நோக்கி நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். செய்த தவறை மறைக்கும் ஒருவர் நாவில் தேன்ஒழுகும் வார்த்தைகளை பேசுவதைப்பார்த்து இப்படியும் ஒருவர் போலியாக இருக்கமுடியுமா என்று வியந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் இங்கு அப்படித்தான் நடந்து கொள்கிறான்.… Continue reading இதழ்: 603 அப்பப்பா! என்ன போலியான முகபாவம்!
Month: January 2019
இதழ்: 602 என்னிடம் ஏன் இந்த மனஸ்தாபமோ!
1 சாமுவேல் 15: 10,11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. இன்றைய வேத பகுதியை வாசிக்கும்போது நாம் என்றைக்காவது நம்முடையப் பிள்ளைகளைப் பார்த்து இவனை அல்லது இவளை ஏன் பெற்றோமோ என்று மனஸ்தாபப் பட்டதுண்டோ என்று சிந்தித்தேன்! அவர்கள் தவறு பண்ணியபோதுகூட ஒருநாளும் அந்த எண்ணம் தலைதூக்கியதேயில்லை. பிள்ளைகள் தவறு பண்ணும்போது மனவேதனை உண்டு ஆனால் மனஸ்தாபம் இல்லை என்றுதானே நீங்களும் நினைக்கிறீர்கள்! இந்த மனவேதனை… Continue reading இதழ்: 602 என்னிடம் ஏன் இந்த மனஸ்தாபமோ!
இதழ்: 601 எதற்கு மதிப்பு அதிகம்!
1 சாமுவேல் 15: 1,3, 9 பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: ....இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும். .... இப்பொழுதும் நீ போய் , அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், கழுதைகளையும், கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். சவுலும், ஜனங்களும் ஆகாகையும்,ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும் அழித்துபோட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும், உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்… Continue reading இதழ்: 601 எதற்கு மதிப்பு அதிகம்!
இதழ்: 600 ஒரு தடையும் இல்லை! தைரியமாயிரு!
1 சாமுவேல் 14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும்,கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். கடவுள் எப்படி என் தேவைகளை அறிந்து எனக்காக யாவையும் செய்ய முடியும்! அவர் என்ன நம் அருகில் இருக்கிறாரா? என்னைப்போல் எத்தனை கோடி மக்கள் தங்களை அவருடைய பிள்ளைகள் என்கிறார்கள்! அத்தனைபேரில் சத்தமும் அவர் காதில் விழுமா? என்று… Continue reading இதழ்: 600 ஒரு தடையும் இல்லை! தைரியமாயிரு!
இதழ்: 598 சூழ்நிலை உனக்கு சாதகமானால்?
1 சாமுவேல் 13: 9 அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன் அது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த வசனத்தை எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வேன் என்ற குணம்! இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத… Continue reading இதழ்: 598 சூழ்நிலை உனக்கு சாதகமானால்?
இதழ்: 599 இருதயத்திற்கேற்ற ஒருவன்!
1 சாமுவேல் 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது.கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார். கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். நான் என்று வேதத்தை படிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து தாவீதைப் பற்றி அதிகமாக படிப்பேன். முதலில் தாவீது கோலியாத்! பின்னர் தாவீது பத்சேபாள்!!!! உண்மையிலேயே இந்த ஹீரோவின் வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள் இருந்தன! தாவீதின் வாழ்க்கை கிறிஸ்தவர்கள் கையில் பந்தைப்போல… Continue reading இதழ்: 599 இருதயத்திற்கேற்ற ஒருவன்!
இதழ்: 596 ப ய மா? எனக்கா?
1 சாமுவேல் 13: 5,6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும்,துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டனர் என்று பார்த்தோம். ஒரு ராஜா கிடைத்த பின்னர் அவர்கள் தங்களுக்கு தாங்களே வினை வைத்த மாதிரி ஆகி… Continue reading இதழ்: 596 ப ய மா? எனக்கா?
இதழ்: 595 யார் அவர்???
1 சாமுவேல்: 12: 24 அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து பாருங்கள். தேவனாகியக் கர்த்தர் நம்மிடம் சிநேகிதம் கொள்ள வாஞ்சையாய் இருக்கிறார் என்று பார்த்தோம். பிதாவாகிய தேவனைப் பற்றி நான் படிக்கும்போதெல்லாம், அவர் வானத்தையும் அதிலுள்ள யாவற்றையும் ஆளுகை செய்யும் மகா சக்தி வாய்ந்த தேவனாயிருந்தும் என்னுடைய மிகச்சிறிய உள்ளத்தில் வாசம் செய்து ஆளுகை செய்வது என்னை பிரம்மிக்க வைக்கும். நாம் நம்முடைய வசதிக்கேற்றவாறு பிதாவாகிய தேவனை ஒரு பொம்மையைப் போல… Continue reading இதழ்: 595 யார் அவர்???
இதழ்: 594 அவர் என் சிநேகிதர்!
யோவான் 15:15 நான் உங்களைச் சிநேகிதர் என்றேன் பிதாவாகிய தேவனைப் பற்றி சில நாட்கள் சிந்திக்கலாம் என்று சொன்னேன்! நெருக்கமான நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது நேரம் போவதே தெரியாது அல்லவா? ஒவ்வொருத்தர் நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்! நண்பர்களைத் தன் குடும்பத்துக்கும் மேலாக கருதுபவர்களைப் பார்த்ததுண்டா? நாம் வாசிக்கும் இந்த வசனத்தில், கர்த்தராகிய இயேசுவானவர் நம்மோடு கொள்ள ஆசைப்படும் உறவை வெளிப்படுத்தினார். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்கிறதில்லை, சிநேகிதர் என்றேன் என்றார். தேவன்… Continue reading இதழ்: 594 அவர் என் சிநேகிதர்!
இதழ் 593: உமதண்டை கிட்டி சேர்வதே என் ஆவல் பூமியில்!
1 சாமுவேல் 12:24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். சாமுவேல் இஸ்ரவேல் மக்களோடு உரையாடும்போது அவர்கள் தேவனாகிய கர்த்தரை முழுஇருதயத்தோடும்கூட சேவிக்கும்படியாக ஊக்கப்படுத்துவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். ஆனால் சில நேரங்களில் மாம்சமான நாம் உன்னதங்களில் வாசம் செய்பவரை சேவிப்பது கடினமாகவே தோன்றுகின்றது அல்லவா! பரலோகத்தில் வாசம் பண்ணுபவர் என் சத்ததை கேட்பாரா? இது என்றுமே புரியாத பரம இரகசியம்! ஆதலால் ஒருசில நாட்கள் நம்முடைய பரம தகப்பனைப் பற்றிப்… Continue reading இதழ் 593: உமதண்டை கிட்டி சேர்வதே என் ஆவல் பூமியில்!
