யோசுவா: 6:23 அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய் ராகாபையும், அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதர்களையும், அவளுக்குள்ள யாவையையும், அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். தன்னுடைய வாழ்வின் அஸ்திபாரத்தை கர்த்தர்மேல் உறுதியாகப் போட்ட ராகாப், வேவுகாரர் அவ்விடம்விட்டு போன பின்னர் அமைதியாக கவனித்து வந்தாள். இஸ்ரவேலர் ஆறு நாட்கள் எரிகோவை சுற்றிவந்தபோது அவள் என்ன நினைத்திருப்பாள்? ஏழாவது நாள் அவர்கள் ஏழுதரம் எரிகோவை சுற்றி… Continue reading மலர்: 2 இதழ்: 145 ராகாப் நம் வீட்டுக்குள் பிரவேசிக்க முடியுமா?
Month: September 2011
மலர்: 2 இதழ்: 144 என் மனமே ஏன் எனக்குள் தியங்குகிறாய்?
எபி:11:31 “விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” நாம் ராகாபுடைய வாழ்க்கையிலிருந்து, நம்முடைய வாழ்வின் அஸ்திபாரக் கற்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறொம்! அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால், விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் அதற்கு தேவையான இன்னொரு கல் என்றும், பாதுகாக்கப் படுதல் நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான மற்றொரு கல் என்றும் பார்த்தோம். அஸ்திபாரக் கற்களில், அடுத்த கல்… Continue reading மலர்: 2 இதழ்: 144 என் மனமே ஏன் எனக்குள் தியங்குகிறாய்?
மலர்: 2 இதழ்: 143 புதிய பிணைப்பு! புதிய சக்தி!
எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” நான் என்னுடைய 13 ம் வயதில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், பள்ளியிலும், கல்லூரியிலும் அநேக காரியங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தது. ஒரு கை மாறி மறு கைக்கு இரகசியமாய் மாற்றப்பட்ட கதை புத்தகங்களை மறுதலித்தது, கும்பலாய் டிக்கட் வாங்கி தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற நண்பர்களோடு போக மறுதலித்தது, சிற்றின்பமான காரியங்களை பேசி சிரித்து நேரம் கழிப்பது, இப்படி பல… Continue reading மலர்: 2 இதழ்: 143 புதிய பிணைப்பு! புதிய சக்தி!
மலர்: 2 இதழ்: 142 சேதமாகாமல் காப்பவர்!
எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” யோசுவா:24:17 ”..நாம் நடந்த எல்லா வழிகளிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே.” என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது வெளியில் எந்த விதமான பழ ரசமும் வாங்கமாட்டேன். வீட்டிலேயே பழங்களை வாங்கி அதை ஜூஸ் போட்டு வைப்பேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது கருப்பு திராட்சை கிரஷ் பண்ணுவது! கடினமான வேலைதான் ஆனாலும்… Continue reading மலர்: 2 இதழ்: 142 சேதமாகாமல் காப்பவர்!
மலர்: 2 இதழ்: 141 அன்டெனா தேவை!
"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு , கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” (எபி:11:31) அந்தக்காலத்தில் டெலிவிஷன் வந்த புதிதில் நாம் அதற்கு அன்டெனா பொருத்த வேண்டியதிருந்தது அல்லவா? எங்களுடைய முதல் கருப்பு வெள்ளை டிவி என்னால் மறக்கவே முடியாத ஒன்று! சில நேரங்களில் காற்று பலமாக வீசினால் அன்டெனா ஒருபக்கம் திரும்பிவிடும், நமக்கு படம் சரியாக வராது. அப்படிப்பட்ட நேரங்களில் எங்கள் வீட்டில், எங்களில் ஒருவர் மாடி மேலே ஏறி அந்த அன்டெனாவை… Continue reading மலர்: 2 இதழ்: 141 அன்டெனா தேவை!
மலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்!
யோசு:2:11 “……உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்.” கடந்த இரண்டு வருடங்களாக உலக பொருளாதார நிலைமையால் எங்கள் கம்பெனியின் ஏற்றுமதி மிகவும் குறைவுபட்டது. அநேக தொழிலாளர்கள் இருந்ததால் வேலையை நிறுத்தமுடியாமல் தொடர்ந்துவந்தோம். நாங்கள் தயாரித்த ஆடைகள் குவிய ஆரம்பித்தது. ஒரு வருடம் எப்படியோ சமாளித்து விட்டேன், அடுத்த வருடம் என்னால் கம்பெனியில் வேலை செய்தவர்களின் ஊதியம், பராமரிப்பு இவற்றை சமாளிக்க முடியாமல் திணறினேன். என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒருநாள் டிவி போட்டபோது ஒரு… Continue reading மலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்!
மலர்: 2 இதழ்: 139 இரக்கம் காட்டு!
யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.” சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால்… Continue reading மலர்: 2 இதழ்: 139 இரக்கம் காட்டு!
மலர்: 2 இதழ்: 138 உம்மை எனக்கு வெளிப்படுத்தும்!
யோசுவா: 2:9 ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்” யோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து, அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம். ராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது. இந்த… Continue reading மலர்: 2 இதழ்: 138 உம்மை எனக்கு வெளிப்படுத்தும்!
மலர்: 2 இதழ்: 137 நீ யார்ப் பக்கம்?
யோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்றான். நாம் ராகாபைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் வேவுக்காரர் இருவர் வேசியான அவளுடைய வீட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கினார்கள் என்று நேற்று பார்த்தோம். சில நேரங்களில் பிரச்சனைகள் நாம் அழைக்காமலே நம் வாசலைத் தட்டுகின்றன என்பது எவ்வளவு உண்மை! ராகாப் இந்த இரு வேவுகாரரையும் தன் விட்டுக்கு… Continue reading மலர்: 2 இதழ்: 137 நீ யார்ப் பக்கம்?
மலர்: 2 இதழ்: 136 முள்ளுக்குள்ளே ரோஜா மலரும்!
யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா? நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வருவதற்குள் மேடையின் பின்னணி அதற்குத் தக்கவாறு மாறினால் தான் காட்சிக்கு உயிர் கிடைக்கும்!… Continue reading மலர்: 2 இதழ்: 136 முள்ளுக்குள்ளே ரோஜா மலரும்!
