சங்கீதம்: 119:133 “ உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.” நாம் இன்று வேதத்தில் லேவியராகமத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அநேகர் இதை வாசிக்க கஷ்டப் படுகிறதை பார்த்திருக்கிறேன். புரியவில்லை, சொன்னதையே திருப்பி சொல்வது போல உள்ளது என்று பலர் கூறுவார்கள். அடுத்த சில வாரங்கள் நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படிப்போம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள… Continue reading மலர்:1இதழ்: 92 அப்பப்பா! எதை செய்தாலும் குற்றம்!!
Author: Rajavinmalargal
மலர்:1இதழ்: 91 மனப்பூர்வமுள்ள ஆராதனை!
யாத்தி: 35:22 “மனப்பூர்வமுள்ள ஸ்திரீ, புருஷர் யாவரும், அஸ்தகடங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்.” நேற்று நாம் தேவனை ஆராதிப்பதைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் வாசிக்கிற பகுதி, இஸ்ரவேல் மக்கள், தேவன் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தின் கட்டுமானப் பணிக்கு, காணிக்கைகளை மனமுவந்து கொண்டு வந்ததைப் பார்க்கிறோம். இதில் மனப்பூர்வமுள்ள என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதின் அர்த்தம் என்ன? யாராலும் உந்தப்படாமல் தானாக முன் வந்து கொடுத்தல், அல்லது எதையும்… Continue reading மலர்:1இதழ்: 91 மனப்பூர்வமுள்ள ஆராதனை!
மலர்:1இதழ்: 90 புத்தியுள்ள ஆராதனை!
யாத்தி: 35: 21 பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ….” நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை பிரயாணத்தை யாத்திராகம புத்தகத்தின் மூலம் தொடருவோம். யாத்திராகமம் 31ம் அதிகாரம் 18ம் வசனத்தில், கர்த்தர் சீனாய் மலையிலே மோசேயோடே பேசி, அவருடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். மோசே மலையிலிருந்து வரத் தாமதித்தபோது… Continue reading மலர்:1இதழ்: 90 புத்தியுள்ள ஆராதனை!
மலர்:1இதழ்: 89 தனிமைக்கு துணை நில்!
யாத்தி:22:22,23 ”விதவையையும், திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு..” நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம். என் வீட்டின் வாசலில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த மரம் இப்பொழுது இலைகளை உதிர்த்து விட்டு மொட்டையாக நிற்கிகிறது. சில நேரம் அந்த மரத்தை பார்க்கும்போது, தனக்கு அன்பானவர்களை இழந்து தனிமை என்ற கொடுமையில் வாடும்… Continue reading மலர்:1இதழ்: 89 தனிமைக்கு துணை நில்!
மலர்:1இதழ்: 88 அந்நியனை ஒடுக்காதே!
யாத்தி: 22:21 “அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக! நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.” நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம். இதை எழுத ஆரம்பிக்கும் போது பல அனுபவங்கள் மனக்கண் முன் வருகின்றன! பல மாகாணங்களுக்கு வேலையின் காரணமாக சென்றிருக்கிறோம். எத்தனை பேர் எங்களை அன்புடன் உபசரித்தனர்! எல்லாவற்றுக்கும் மேலான அனுபவம் ஒரு அந்நிய தேசத்து குடும்பம் முன்பின் அறியாத எங்களுக்கு தங்க இடம் கொடுத்து… Continue reading மலர்:1இதழ்: 88 அந்நியனை ஒடுக்காதே!
மலர்:1இதழ் 87 மோசம் போக்காதே! மோசம் போகாதே!
யாத்தி:22:16 நியமிக்கப் படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காக பரிசம் கொடுத்து அவளை விவாகம் பண்ணக் கடவன். யாத்திராகமத்தில் உள்ள தேவனுடைய கட்டளைகளை சில நாட்கள் தியானிக்கலாம் என்று நினைத்தோம். என் கை வலியின் காரணமாகத் தொடர முடியவில்லை. ஓரளவுக்கு விடுதலையை என் தேவன் கட்டளையிட்டதால் தொடரலாம் என்று எண்ணுகிறேன். இன்றைய வேதாகம பகுதியில் “மோசம் போகுதல்” என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். அப்படியானால் என்ன? சில நேரங்களில் நாம்… Continue reading மலர்:1இதழ் 87 மோசம் போக்காதே! மோசம் போகாதே!
மலர்:1இதழ் 85 ஒவ்வொரு மலரும் தனி விதம்!
யாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன; இன்று காலையில் என் வீட்டு வாசலில் பூத்து குலுங்குகிற Flames of the Forest என்ற செந்நிற மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரத்தின் நுனி கிளைகளில், நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது போல் ,கொத்து கொத்தாக, அடுக்கடுக்காக பூத்து, அந்த இடத்துக்கே ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. இந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கர்த்தரின் படைப்பில் தான் எத்தனை விதம்… Continue reading மலர்:1இதழ் 85 ஒவ்வொரு மலரும் தனி விதம்!
மலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன?
ஆதி : 24: 67 “ அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக் கொண்டு போய்,அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டு அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.” வருடங்கள் கடந்தோடின! சாராள் தன் 127 வது வயதில் மரிக்கிறாள். திருமண வயதை அடைந்துவிட்டான் ஈசாக்கு. ஆபிரகாம் தன் முதிர்ந்த வயதில், தன் குமாரன் ஈசாக்குக்கு திருமணம் ஒழுங்கு செய்கிறதைப் பார்க்கிறோம். தன் மகனுக்கு சரியான… Continue reading மலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன?
மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?
மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்! விளைவு?.
அன்பின் சகோதர, சகோதரிகளே, ராஜாவின் மலர்கள் மே 2 ம் தேதியிலிருந்து புதிய பொலிவுடன் தொடர உள்ளது. யாத்திராகமம் 21, 22, 23 ம் அதிகாரங்களில் உள்ள தேவனுடைய கட்டளைகளை நாம் தொடர்ந்து தியானிக்கப் போகிறோம். அதற்கு முன்னோடியாக நீங்கள் விரும்பி வாசித்த சில தியானத் துளிகளை மறுபடியும் வெளியிடுகிறேன். கர்தருடைய ஆசிர்வாதம் நம்மனைவரோடும் தங்குவதாக! உங்கள் சகோதரி, Prema Sunder Raj
