எண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.” இதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது. நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை… Continue reading மலர் 6 இதழ் 390 – பகலில் சுட்டெரிக்கும் வெயில்!
Month: May 2016
மலர் 6 இதழ் 389 – பயமின்றிய பிரயாணம்!
எண்ணா:14:42 ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.” போன வாரம் விமானத்தில் நியூ யார்க் பட்டணம் சென்று கொண்டிருந்தோம். அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் பயங்கர மேகமூட்டத்துக்குள்ளாக வர வேண்டியதிருந்தது. நாங்கள் வந்த விமானம் அடிக்கடி தடதடவென்று கீழே விழுவதுபோல் உதறியது. நெஞ்சு படபடவென்று இருந்தாலும், அந்த விமானத்தின் ஓட்டுநர் பத்திரமாக அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் அமர்ந்திருந்தோம்! சில நேரங்களில் நம் வாழ்க்கையும் மேகமூட்டத்துக்குள்ளாகப் பறக்கும்… Continue reading மலர் 6 இதழ் 389 – பயமின்றிய பிரயாணம்!
மலர் 6 இதழ் 388 – நம்பிக்கையை விழுங்கிய வனாந்தரம்!
எண்ணா:14:35 ”கர்த்தராகிய நான் இதை சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்த பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.” எப்பொழுதும் மரணத்தைப் பற்றி பேசுகிற சில நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்திருகிறேன். ”எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா!...... நான் செத்தால்தான் உங்களுக்கு என் அருமை தெரியும்! ……நான் செத்தாவது இந்த காரியத்தை செய்வேன்!.... இப்படிப்பட்ட வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்திய அவர்களின் ஆயிசு சிறியதாகவே இருந்தது. இஸ்ரவேல்… Continue reading மலர் 6 இதழ் 388 – நம்பிக்கையை விழுங்கிய வனாந்தரம்!
மலர் 6 இதழ் 387 – ஏன் என் ஜெபத்துக்கு பதிலில்லை?????
எண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று வர்ணித்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் அமைதியாக, கர்த்தரால் வழிநடத்தப்பட்ட ஜனங்களாக, கானானை நோக்கி வெற்றி நடைபோட்டிருப்பார்கள் என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் முறுமுறுப்பதையும், மோசேக்கு விரோதமாகக் கூட்டங்கூடுவதையும் தான்… Continue reading மலர் 6 இதழ் 387 – ஏன் என் ஜெபத்துக்கு பதிலில்லை?????
மலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்!
எண்ணா:16:1-4 ”கோராகு என்பவன்…. இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்குமுன்பாக எழும்பி, மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக கூட்டங்கூடி, அவர்களை நோக்கி நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். மோசே அதைக் கேட்டபோது முகங்குப்புற விழுந்தான்.” இந்த வேதபகுதியை வாசித்தபோது, எரேமியா தீர்க்கதரிசி நம்முடைய இருதயத்தைப் பற்றி எழுதியது மனதில் பட்டது … Continue reading மலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்!
மலர் 6 இதழ் 385 – குழந்தைத்தனமான குணம்!
எண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். என்னுடைய இரண்டு பேரன்மாரும் ஐபோனை ( iPhone) உபயோகிப்பதில் வல்லவர்கள்! ஒருவனுக்கு 3 வயது, மற்றொருவனுக்கு 3 1/2 வயது, ஆனால் அவர்களுடைய appக்கு சரியாகப் போகத் தெரியும்! பல வருடங்கள் உபயோகித்தவர்கள் போல சுலபமாக இயக்குவார்கள்! எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்! என்னை… Continue reading மலர் 6 இதழ் 385 – குழந்தைத்தனமான குணம்!
மலர் 6 இதழ் 384 – சுய நம்பிக்கையைத் தாக்கும் பட்டயம்!
எண்ணா: 21:4 “அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப் போகும்படிக்கு ஓர் என்னும் மலையை விட்டு சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்னினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.” என்னுடைய இளவயதில் தமிழ் மொழி கதைகள், நாவல்கள் அதிகமாக வாசிப்பேன். விசேஷமாக சரித்திர நாவல்களில் தான் ஆர்வம் அதிகம். அந்தக் கதைகளில் எதிரிகள் பட்டயத்தை மறைத்து செல்வதும், தக்க சமயம் வரும்போது பட்டயத்தை வெளியே எடுத்து உருவக்குத்துவதும் அடிக்கடி வாசிக்கிற ஒரு காரியம். இன்றைய தியானத்தில் நாம் பட்டயத்தைப் பற்றி… Continue reading மலர் 6 இதழ் 384 – சுய நம்பிக்கையைத் தாக்கும் பட்டயம்!
மலர் 6 இதழ் 383 – பார்வோனின் சாட்டையை விட பலத்த அடி!
எண்ணா:11:4 அவர்களுக்குள் இருந்த அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள். இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? என்றாவது ஏதாவது ஒன்றின் மேல் அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்ட ஞாபகம் இருக்கிறதா? நான் சிறு வயதில் ஐஸ்கிரீம் சாப்பிட அதிகமாக ஆசைப்படுவேன். அப்பொழுது வீடுகளில் பிரிட்ஜ் கிடையாது. வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மெரினா கடற்கரைக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அவ்வாறு ஒருமுறை நாங்கள் கடற்கரைக்கு போயிருந்தபோது அளவுக்கு மிஞ்சி ஐஸ்கிரீம் சப்பிட்டுவிட்டேன்.… Continue reading மலர் 6 இதழ் 383 – பார்வோனின் சாட்டையை விட பலத்த அடி!
மலர் 6 இதழ் 382 – இந்த பயங்கரம் உனக்கு வேண்டாம்!
எண்ணாகமம்:25:1 - 2 “ இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில்,ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே, வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள். ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள்.” வீட்டில் கேக் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்ஞள் கருவையும் ஏன் பிரிக்கிறோம் என்று நன்கு தெரியும்! வெள்ளைக்கரு கேக்கை மிருதுவாகப் பண்ணும் ஆனால் மஞ்சள் கருவோ கனமாக இருப்பதால், வெள்ளைக் கருவின் தன்மையையே கெடுத்து,… Continue reading மலர் 6 இதழ் 382 – இந்த பயங்கரம் உனக்கு வேண்டாம்!
மலர் 6 இதழ் 381- நம் கால்களை இழுக்கும் சரிவு மண்!
எண்ணா: 14:`2 “ இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி : எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும். இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.” நான் உயர்நிலைப்ப் பள்ளியில் படிக்கும்போது, ஒருவருடம் நான் என்னுடைய சொந்த ஊரில் படிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்கள். நான் இந்த சென்னையில் படித்தால் ஒரு நல்ல பெண்ணாகத் தேற மாட்டேன் என்ற எண்ணம் அம்மாவுக்கு. ஒருவருடமாவது சொந்த ஊர் வாசனை… Continue reading மலர் 6 இதழ் 381- நம் கால்களை இழுக்கும் சரிவு மண்!
